தன்னை ஃபோகஸ் செய்த கேமராமேன்; வாட்டர் பாட்டிலை தூக்கி எறிந்த தோனி – வைரலாகும் வீடியோ!

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 39ஆவது லீக் போட்டியில் தன்னை ஃபோகஸ் செய்த கேமரா மீது தோனி வாட்டர் பாட்டிலை தூக்கி எறிவது போன்று செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

MS Dhoni ready to throw away water bottle to cameraman who focus him during CSK vs LSG in 39th IPL 2024 Match at MA Chidambaram Stadium rsk

எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 39ஆவது லீக் போட்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி சிஎஸ்கே அணியில் அஜிங்க்யா ரஹானே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

இதில் ரஹானே 1 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த டேரில் மிட்செல் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். ஆனால், ஆவரும் பெரிதாக சோபிக்கவில்லை. அவர் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஷிவம் துபே ஜோடி சேர்ந்தார். இருவரும் சிக்ஸர் மற்றும் பவுண்டரி மழை பொழிந்தனர்.

 

 

இதில், ருதுராஜ் கெய்க்வாட் 28 பந்துகளில் அரைசதம் கடந்து, 56 பந்துகளில் 103 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சதம் விளாசிய முதல் கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், இந்த சீசனில் சதம் அடித்த முதல் கேப்டன் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக சிஎஸ்கே அணிக்கு 249 போட்டிகளில் 235 போட்டிகளில் கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அந்த சாதனையைத் தான் தற்போது தனது 8ஆவது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் படைத்துள்ளார். இந்த சீசனில் இதுவரையில் விளையாடிய 8 போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் 349 ரன்கள் குவித்துள்ளார். இதில், 2 அரைசதங்களும் அடங்கும்.

இதே போன்று ஷிவம் துபேவும் தன் பங்கிற்கு அரைசதம் விளாசினார். அவர் 27 பந்துகளில் 3 பவுண்டரி, 7 சிக்ஸர் உள்பட 66 ரன்கள் எடுத்து ரன் அவுட் செய்யப்பட்டார். கடைசியில் வந்த தோனி பவுண்டரி அடிக்க சிஎஸ்கே 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் குவித்தது.

இதில், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 60 பந்துகளில் 12 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 108 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த நிலையில் தான் ஷிவம் துபே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அடுத்து தோனி எப்போது களமிறங்குவார்? அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை ரசிகர்களுக்கு காண்பிக்கும் வகையில் கேமராமேன் டிரெஸிங் ரூமை ஃபோகஸ் செய்தார்.

அப்போது தோனி தனது கையில் வைத்திருந்த வாட்டர் பாட்டிலை தூக்கி எறிவது போன்று செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் மேட் ஹென்றி, மோசின் கான் மற்றும் யாஷ் தாக்கூர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios