என் சாதி என்னென்னு கேட்குறான்.. மாயா முன்வைத்த பகீர் குற்றச்சாட்டால் பரபரப்பான பிக்பாஸ் வீடு
பிக்பாஸ் போட்டியாளரான மாயா கிருஷ்ணன், சக போட்டியாளர் மணி சந்திரா தன்னிடம் சாதி பற்றி கேட்டது தனக்கு அதிர்ச்சி அளித்ததாக கூறி இருக்கிறார்.
Maya
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே பரபரப்புக்கு விறுவிறுப்புக்கும், அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனும் முதல் வாரத்தில் இருந்தே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. முதல் வாரத்திலேயே கல்வியின் அவசியம் குறித்தும் விசித்ராவும், அவசியமின்மை குறித்து ஜோவிகாவும் விவாதித்தது, சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆனது. அதேபோல் பவா செல்லதுரை சொன்ன கதைகளும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.
Maya krishnan
அந்த வகையில் பிக்பாஸ் 7-வது சீசனில் சண்டைக்கோழியாக இருக்கும் போட்டியாளர் என்றால் அது மாயா கிருஷ்ணன் தான். முதல் வாரத்தில் இருந்தே நாளுக்கு நாள் கண்டெண்ட் கொடுத்து வரும் மாயா, கடந்த வாரம் கூட கூல் சுரேஷ் உருவகேலி செய்து காமெடி பண்ணுவதை கமல் கேட்கமாட்டார் என கூறி இருந்தார். ஆனால் கமல் அதனை நோட் பண்ணி கேட்டு, கூல் சுரேஷுக்கும் செம்ம டோஸ் கொடுத்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Maya vs Mani
அதேபோல் தற்போது மாயா வைத்துள்ள மற்றுமொரு குற்றச்சாட்டு சோசியல் மீடியாவில் பேசு பொருள் ஆகி உள்ளது. அதன்படி பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடந்தபோது, மணி தன்னிடம் சாதி பற்றி பேசியதாக ஐஷூவிடம் கலந்துரையாடினார். மாயாவுக்கு சாப்பாடு பரிமாறும் போது, அவர் தனக்கு சிக்கன் வேண்டாம் கிரேவி மட்டும் ஊற்றுமாறு கேட்டதற்கு நீங்க இந்த சாதியா என குறிப்பிட்டு கேட்டிருக்கிறார் மணி.
Bigg Boss Maya
உடனே சாதி பத்தியெல்லாம் பேசாத அதெல்லாம் தப்பு என அந்த இடத்திலேயே கண்டித்த மாயா, நாமினேஷனின் போதும் மணியை நீ ஒரு பிற்போக்குவாதி என கூறி நாமினேட் செய்தார். ஆனால் அவர்கள் இருவரிடையே நடந்த இந்த சாதி பற்றிய பேச்சு ஒளிபரப்பாகவில்லை. இதுவரை எந்த சீசனிலும் நடக்காத ஒரு விஷயமாக சாதி குறித்த பேச்சு பிக்பாஸ் வீட்டில் எழுந்துள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த வாரம் இதுகுறித்து கமல்ஹாசன் கண்டிப்பாக விவாதிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... குளிக்கிற ஆர்வத்தில் டாப்பா போட மறந்த விஷ்ணு... கதவை திறந்து பார்த்து ஷாக் ஆன பூர்ணிமா - பிக்பாஸ் அலப்பறைகள்!