கைதி 2-வை கிடப்பில் போட்ட லோகேஷ்.. கால்ஷீட்டோடு காத்திருந்த கார்த்தியை கழுகுபோல் தூக்கிச்சென்ற பிரபல இயக்குனர்
கைதி 2 -படத்தை கிடப்பில் போட்டுவிட்டு லோகேஷ் கனகராஜ் சூப்பர்ஸ்டார் படத்தை இயக்க ரெடியாகிவிட்டதால், நடிகர் கார்த்தியும் வேறு இயக்குனருடன் கூட்டணி அமைத்துள்ளார்.
Actor karthi
பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் நடிகர் கார்த்திக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அவர் நடிப்பில் தற்போது ஜப்பான் திரைப்படம் உருவாகி உள்ளது. ராஜு முருகன் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தீபாவளிக்கு இப்படம் திரைக்கு வருகிறது.
karthi movie line up
ஜப்பான் படத்தை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இப்படத்திற்கான ஷூட்டிங்கும் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுதவிர 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார் கார்த்தி. இப்படங்களையெல்லாம் முடித்துவிட்டு நடிகர் கார்த்தி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள கைதி 2 படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படியுங்கள்... மார்க் ஆண்டனியில் மாஸ் காட்டிய எஸ்.ஜே.சூர்யாவுக்கு இப்படி ஒரு மனநோய் இருக்கிறதா? பயில்வான் சொன்ன பகீர் தகவல்
karthi, Pa Ranjith
அதில் தற்போது திடீர் டுவிஸ்டாக பா.இரஞ்சித் உடன் கூட்டணி அமைத்துள்ளார் கார்த்தி. கைதி 2 படத்தை கிடப்பில் போட்டுவிட்டு ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் தயாராகிவிட்டதால், அப்படத்திற்காக வைத்திருந்த கால்ஷீட் மொத்தத்தையும் இயக்குனர் பா.இரஞ்சித்திடம் கொடுத்திருக்கிறார் கார்த்தி. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே மெட்ராஸ் என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படம் வெளியாகி இருக்கிறது.
Pa Ranjith
மெட்ராஸ் படம் கடந்த 2014-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அப்படம் வெளியாகி அடுத்த ஆண்டுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. அந்த சமயத்தில் கார்த்தி - பா.இரஞ்சித் இணையும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் பா.இரஞ்சித் தற்போது தங்கலான் மற்றும் சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணிகளில் பிசியாக உள்ளார். அப்படங்களை முடித்ததும் கார்த்தி பட பணிகளை அவர் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ரஜினியுடன் கிசுகிசுக்கப்பட்ட சில்க் ஸ்மிதா.. உச்சகட்ட புகழோடு இறந்த நடிகை - இறுதி நிமிடத்தில் ஓடி வந்த நடிகர்!