சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் காபி, டீ குடிக்காதீங்க.. ICMR ஆய்வாளர்கள் எச்சரிக்கை..

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சமீபத்தில் இந்தியர்களுக்கான 17 உணவு வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

Medical panel ICMR has advised avoiding chai or coffee before and after meals know why Rya

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) சமீபத்தில் இந்தியர்களுக்கான 17 உணவு வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதன்படி, ஆரோக்கியமான வாழ்க்கையுடன் சமச்சீர் மற்றும் மாறுபட்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காபி, டீ நுகர்வை மக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் டீ அல்லது காபியை தங்களுக்கு விருப்பமான பானமாக பயன்படுத்தி வரும் நிலையில் உணவுக்கு சாப்பிடுவதற்கு முன்பு அல்லது பின்பு காபி சாப்பிடுவது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரித்துள்ளது. 

தேநீர் மற்றும் காபியில் காஃபின் மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறது என்றும் உடலியல் சார்புநிலையைத் தூண்டுகிறது" என்று ICMR ஆராய்ச்சியாளர்கள் தெரிவிஹ்ட்துள்ளனர். தேநீர் அல்லது காபியை முற்றிலுமாகத் தவிர்க்குமாறு ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தவில்லை என்றாலும், இந்த பானங்களில் உள்ள காஃபின் உள்ளடக்கம் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இந்தியர்களை அறிவுறுத்தி உள்ளனர்..

வெறும் வயிற்றில் வெந்தய தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள்.. கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..

ஒரு கப் (150மிலி) ஃபில்டர் காபியில் 80-120மிகி காஃபின் உள்ளது, இன்ஸ்டண்ட் காபியில் 50-65மிகி மற்றும் தேநீரில் 30-65மிகி காஃபின் உள்ளது. எனவே தினசரி தேநீர் மற்றும் காபி ஆகியவற்றை மிதமான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், ஒரு தனிநபரின் சராசரி ஒரு நாளைக்கு 300mg-ஐ தாண்டக்கூடாது," என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னும் பின்னும் காபி மற்றும் தேநீர் அருந்துவதைத் தவிர்க்குமாறு அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஏனெனில் இந்த பானங்களில் டானின் என்ற கலவை உள்ளது. அதை உட்கொள்ளும் போது, டானின் உடலில் இரும்பு உறிஞ்சுதலில் தலையிடலாம் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

அதாவது டானின் உங்கள் உடல் உணவில் இருந்து உறிஞ்சும் இரும்பின் அளவைக் குறைக்கும் எனவும், இதனால் உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைவதற்கு வழிவகுக்கிறது.

ரத்த சிவப்பணுக்களில் உள்ள புரதமான ஹீமோகுளோபின் தயாரிப்பதற்கு இரும்பு அவசியம், இது உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கிறது. ஆற்றல் உற்பத்தி மற்றும் ஒட்டுமொத்த செல் செயல்பாட்டிற்கும் இது முக்கியமானது. குறைந்த இரும்பு அளவு இரும்புச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை போன்ற நிலைமைகளுக்கு வழிவகுக்கும்.

அடிக்கடி சோர்வாக உணர்வது அல்லது ஆற்றல் இல்லாமை, மூச்சுத் திணறல், அடிக்கடி தலைவலி, குறிப்பாக செயல்பாட்டின் போது, விவரிக்க முடியாத பலவீனம், விரைவான இதயத் துடிப்பு, வெளிர் தோல், உடையக்கூடிய நகங்கள் அல்லது முடி உதிர்தல் ஆகியவை உடலில் இரும்புச்சத்து குறைபாட்டின் பொதுவான அறிகுறிகள் ஆகும்.

இந்திய மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சியாளர்கள் மேலும் பேசிய போது “ பால் இல்லாமல் தேநீர் அருந்துவது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவது போன்ற ஆரோக்கிய நன்மைகளை சேர்க்கலாம் மற்றும் கரோனரி தமனி நோய் (CAD) மற்றும் வயிற்று புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவும். மறுபுறம், அதிக அளவு காபி உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பில் ஏற்படும் அசாதாரணங்களுக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலுடன் இந்த 5 உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க.. மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்..

பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் இறைச்சிகள் மற்றும் கடல் உணவுகள் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும் என்றும், ப்ரோட்டீன் சப்ளிமெண்ட்களை உட்கொள்ள வேண்டாம் என்றும், சர்க்கரை மற்றும் உப்பைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உணவில் எண்ணெய் குறைவாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவ குழுவின் உணவு வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios