Asianet News TamilAsianet News Tamil

திருமண மண்டபத்துல சாப்பிடலாம்... ஆனா வாய் மட்டும் கொப்பளிக்கக் கூடாது.. ஏன் தெரியுமா?   

 Avoid Rinsing Your Mouth At Marriage Halls : திருமண மண்டபங்கள், ஹோட்டல்களில் வாய் கொப்பளிக்கக் கூடாது என சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்க என்ன காரணம் என இங்கு காணலாம். 

Why You Should Avoid Rinsing Your Mouth at marriage halls and hotels in tamil mks
Author
First Published Sep 28, 2024, 1:29 PM IST | Last Updated Sep 28, 2024, 1:36 PM IST

ஏதேனும் பயணங்கள் மேற்கொள்ளும் போது வெளியில் தங்க நேரிடும். இது மாதிரியான சமயங்களில் தங்கியிருக்கும் ஹோட்டல், லாட்ஜூகளின் பைப்புகளில் வரும் தண்ணீரில் தான் வாய் கொப்பளிக்க வேண்டும்.  இதே போல தான் திருமண மண்டபங்களிலும் சாப்பிட்டுவிட்டு கை கழுவ செல்லும்போது மக்கள் அப்படியே வாய் கொப்பளித்து விட்டு வருவார்கள். தாங்கள் சுத்தம் ஆகிவிட்டதாக நம்புவார்கள். ஆனால் இந்தப் பழக்கம் சரியானது அல்ல என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

தற்போதைய நவீன யுகத்தில் தொட்ட இடமெல்லாம் நோய்த் தொற்றுகள் பரவிக் கொண்டிருக்கின்றன. பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண் கிருமிகள் மூலம் புது புது தொற்று நோய்கள் பரவி வருகின்றன. உணவு பழக்கங்கள் மாறியதால் பலருக்கு நோயெதிர்ப்பு மண்டலமும் பலவீனமாகிவிட்டது. இதனால் எளிதில் நோய்த்தொற்றுக்கு இரையாகிவிடுகின்றனர். இந்த மாதிரி சமயங்களில் சுகாதாரமாக இருப்பதில் அதிக கவனமாக இருக்க வேண்டும்.  

இதனால் தான் பயணங்கள் மேற்கொள்ளும் போது வெளியில் உள்ள பொது கழிப்பிடங்களில் உள்ள நீரை பயன்படுத்தக் கூடாது என சொல்லப்படுகிறது. வீட்டு உணவுகளை முடிந்தவரை உண்ணுங்கள், சுகாதாரமாக இருங்கள் என மருத்துவர்களும் அறிவுறுத்துகின்றனர். ஹோட்டல் திருமண மண்டபங்களில் உள்ள குழாய் தண்ணீரில் வாய் கொப்பளிக்கக் கூடாது என்றும் தற்போது அறிவுறுத்தப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அங்குள்ள மேல்நிலைத் தண்ணீர் தொட்டிகள் முறையாக பராமரிக்கப்படாதது தான். 

இதையும் படிங்க:  வாயில் உள்ள கெட்ட நாற்றத்தை போக்க காலையில் செய்ய வேண்டிய 5 படிநிலைகள்.. நிபுணர்களே சொன்னது!

வீடுகளைப் போன்று திருமண மண்டபம் தினசரி உபயோகத்தில் இருப்பதில்லை. இதனால் அங்குள்ள மேல்நிலை தொட்டிகளில் தண்ணீர் முறையாக வெளியேற்றப்படுவதில்லை. பல நாள்கள் தண்ணீர் தேங்கியே கிடப்பதால் அவை அசுத்தமாக வாய்ப்புள்ளது. அது மூடியே இருந்தாலும் பயன்படாமல் தேங்கியுள்ள அந்த தண்ணீரில் நுண்ணுயிரிகள் வர வாய்ப்புள்ளது. ஏற்கனவே உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பவர்கள் அந்த தண்ணீரில் வாய் கொப்பளித்தால், வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மூலம்  தொண்டையில் பாதிப்பு (Throat Infection) வரக் கூடும். எச்சரிக்கையாக இருங்கள்.  திருமண மண்டபத்தில் சாப்பிட்டதும் வாய் கொப்பளித்தே தீர வேண்டுமென்றால் சாப்பிடும் போது குடிக்க கொடுக்கும் தண்ணீர் பாட்டிலை பயன்படுத்துங்கள். 

இங்கு மட்டுமல்ல, ஹோட்டல்களுக்கும் இது பொருந்தும். அங்கும் சாப்பிட்டுவிட்டு கைகளைக் கழுவிய பிறகு வாய் கொப்பளிப்பது பலருக்கும் வழக்கம். அசைவ உணவுகள் சாப்பிட்டவர்கள் வாய் துர்நாற்றம் தவிர்க்க பற்களின் இடுக்குகளை முறையாக சுத்தம் செய்வதாக எண்ணி ஹோட்டலிலே வாய் கொப்பளிப்பார்கள். ஆனால் ஹோட்டல் குழாயில் வரும் தண்ணீர் சுகாதாரமானதா என நமக்கு தெரியாது. நோய் தொற்றுகள் ஏற்பட கூட வாய்ப்புகள் உள்ளன.  

இதையும் படிங்க:  மவுத்வாஷ்...உங்களுக்கு இதய நோய் இருக்கிறதா இல்லையா என்று சொல்லும்..!! 

திருமண மண்டபம், ஹோட்டலில் ஏன் வாய் கொப்பளிக்கக் கூடாது?

  • நீரின் தரம் எப்படி இருக்கிறது என தெரியாது. அங்குள்ள தண்ணீர் தொட்டிகள் முறையாக சுத்தம் செய்யப்படுகிறதா என்ற நம்பிக்கையான ஆதாரங்கள் இல்லை.
  • வீடுகளைப் போல இது மாதிரியான பொது இடங்களில் நீர் சுத்திகரிப்பு செயல்முறைகள் போதுமானதாக இருக்காது.
  • மேல்நிலை தண்ணீர் தொட்டிகளில் பாக்டீரியா, வைரஸ்கள், ஒட்டுண்ணிகள், ஏதேனும் உலோகங்கள் அல்லது இரசாயனங்கள் இருக்கலாம். வெகுநாளாக மாற்றப்படாத துருவேறிய குழாய்களாக கூட தண்ணீர் இணைப்பு இருக்கலாம். இந்த காரணங்களால் அங்கு வாய் கொப்பளிப்பதே முற்றிலும் தவிர்க்க வேண்டும். 
  • அசுத்த நீரில் பரவும் நோய்களான காலரா, டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம். சிலருக்கு இரைப்பை குடல் தொற்று, வாய்வழி தொற்றுகளான பற்களின் ஈறுகளில் நோய், பல் சிதைவு வர வாய்ப்புள்ளது. தண்ணீரில் மாசுக்கள் இருந்தால் ஒவ்வாமை, தோல் எரிச்சல் ஏற்படலாம். கவனமாக இருங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios