தமிழ்நாட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்? தலைவரா.. தளபதியா! 2023ல் அதிகவசூல் அள்ளிய டாப் 10 தமிழ் படங்களின் லிஸ்ட்
தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை வாரிக்குவித்த டாப் 10 தமிழ் படங்களின் லிஸ்ட்டை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
Highest Grossing films in Tamilnadu boxoffice
2023-ம் ஆண்டு முடிவடைய இன்னும் ஒருமாதமே எஞ்சி உள்ளது. இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் வெளியாகின. இதில் விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் விஷால், உதயநிதி ஸ்டாலின், விஜய் சேதுபதி ஷாருக்கான் ஆகியோரது படங்கள் அமைந்தன. அந்த வகையில் 2023-ம் ஆண்டு இதுவரை ரிலீசான படங்களில் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை வாரிக்குவித்த டாப் 10 படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Jawan
இந்த பட்டியலில் 10-வது இடத்தை பிடித்துள்ள படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி சூரி நடித்த இப்படம் கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்தது. இதற்கு அடுத்தபடியாக 9-வது இடத்தை நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் பிடித்துள்ளது. அட்லீ இயக்கிய இது இந்தி படமாக இருந்தாலும் இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு என ஏராளமான தமிழ் நடிகர்கள் நடித்திருந்ததால் இப்படம் தமிழ்நாட்டில் வசூலை வாரிக்குவித்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Maamannan, Maaveeran
இந்த லிஸ்ட்டில் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் 8-வது இடத்தை பிடித்துள்ளது. இதையடுத்து விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்த மார்க் ஆண்டனி, உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் ஆகிய திரைப்படங்கள் முறையே 6 மற்றும் 7-வது இடத்தை பிடித்துள்ளன. நடிகர் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீசான துணிவு திரைப்படம் 5-வது இடத்தில் உள்ளது. அதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசான பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் இந்த பட்டியலில் 4-ம் இடத்தை பிடித்துள்ளது.
Leo vs Jailer
இந்த பட்டியலில் டாப் 3 இடத்தில் நடிகர் விஜய்யின் வாரிசு மற்றும் லியோ ஆகிய இரண்டு திரைப்படங்கள் உள்ளன. இதில் பொங்கலுக்கு திரைக்கு வந்த வாரிசு திரைப்படம் மூன்றாம் இடத்திலும், கடந்த அக்டோபர் மாதம் வெளிவந்த லியோ திரைப்படம் முதல் இடத்தையும் பிடித்துள்ளது. உலகளாவிய வசூலில் லியோவை ஜெயிலர் வீழ்த்தினாலும், தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் நிலவரப்படி ஜெயிலருக்கு இரண்டாம் இடமே கிடைத்துள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டு தமிழ்நாட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக தளபதி விஜய் உள்ளார் என்பது இந்த பட்டியல் மூலம் தெரிகிறது. தமிழ்நாட்டில் மட்டும் லியோ படம் 230 கோடியும் ஜெயிலர் 190 கோடியும் வசூலித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... அமீரின் நேர்மையை எடைப்போட்டு பார்க்க எவருக்கும் தகுதி இல்லை! ஞானவேல் ராஜாவுக்கு நச்சுனு பதிலடி கொடுத்த சினேகன்