Asianet News TamilAsianet News Tamil

அமீரின் நேர்மையை எடைப்போட்டு பார்க்க எவருக்கும் தகுதி இல்லை! ஞானவேல் ராஜாவுக்கு நச்சுனு பதிலடி கொடுத்த சினேகன்

பருத்திவீரன் பட பிரச்சனை மீண்டும் வெடித்துள்ள நிலையில், இயக்குனர் அமீர் தரப்பு நியாயத்தை கூறி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் பிக்பாஸ் சினேகன்.

BiggBoss Snekan stands for ameer in paruthiveeran movie controversy gan
Author
First Published Nov 27, 2023, 2:41 PM IST | Last Updated Nov 27, 2023, 2:41 PM IST

அமீர் இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் பருத்திவீரன். கார்த்தி ஹீரோவாக அறிமுகமானதும் இப்படத்தின் மூலம் தான். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். இப்படம் தமிழ் சினிமாவில் ஒரு மாஸ்டர் பீஸ் படமாக அமைந்தாலும், அப்படத்தின் இயக்குனர் அமீருக்கும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை 15 ஆண்டுகளைக் கடந்து இன்றும் நீடித்து வருகிறது.

பருத்திவீரன் படம் எடுத்தபோது தப்பு தப்பாக கணக்கு காட்டி தன்னிடம் இருந்து பணத்தை அமீர் திருடிவிட்டதாகவும், இப்படம் கிடப்பில் கிடந்தபோது நடிகர் சூர்யா தான் தன் சொந்த காசை போட்டு படத்தை ரிலீஸ் செய்ததாகவும் ஞானவேல் ராஜா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதையடுத்து அமீர் ஞானவேல் ராஜாவின் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என மறுத்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

BiggBoss Snekan stands for ameer in paruthiveeran movie controversy gan

அதுமட்டுமின்றி அமீருக்கு ஆதரவாக இயக்குனர்கள் சமுத்திரக்கனி, சசிகுமார், சுதா கொங்கரா, பொன்வண்ணன் ஆகியோர் குரல் கொடுத்தனர். அமீர் தான் இப்படத்தை தன் சொந்த செலவில் எடுத்ததாக சமுத்திரக்கனி, சசிகுமார் ஆகியோர் கூறியதோடு, அவரை மரியாதைக் குறைவாக பேசும் ஞானவேல் ராஜாவிற்கும் தங்கள் கண்டனத்தையும் பதிவு செய்தனர். இந்த நிலையில் கவிஞர் சினேகனும் அமீருக்கு தன் ஆதரவை தெரிவித்துள்ளார்.

அவர் பதிவிட்டுள்ளதாவது : “நான் இயக்குனர் அமீரோடு அவரின் முதல் படத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். அவரின் நேர்மையை எடைப்போட்டு பார்க்கும் தகுதி  எவருக்கும் இல்லை. பருத்தி வீரன் படத்தை முடிப்பதற்கு  அவர் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளானார் என்பது அவரோடு கூட பயணித்த என்னைப் போன்றவர்களுக்கு தான்  தெரியும். ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும் என சினேகன் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... உங்கள் பேச்சுத்திமிர் வக்கிரமாக உள்ளது ஞானவேல்ராஜா - அமீரை கொச்சைப்படுத்தியதால் கொந்தளித்த பருத்திவீரன் நடிகர்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios