லைட் வெளிச்சத்தில் மின்னும் செட்... ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்.. பிரபலங்கள் வருகை! களைகட்டும் லியோ வெற்றி விழா!
'லியோ' திரைப்படத்தின் வெற்றி விழா இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ள நிலையில், அங்கு ரசிகர்களின் ஆர்ப்பாட்டம், மற்றும் பிரபலங்கள் வருகை குறித்த புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.
தளபதி விஜய் நடிப்பில் அக்டோபர் 19-ஆம் தேதி, ரிலீஸ் ஆன லியோ படத்தின் வெற்றி விழா, இன்று மாலை 6 மணிக்கு நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகள், கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் நிலையில், அதிகப்படியான கூட்டங்கள் கூடுவதை தவிர்க்கவும், எந்த வித அசம்பாவிதம் நேராமல் இருக்கவும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் இன்று நடக்கும் 'லியோ' சக்ஸஸ் மீட்டில் தளபதி விஜய் என்ன பேசுவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே போல், ரசிகர்களும் ஆவலுடன் தளபதி பேச்சை கேட்க கார்த்திருக்கின்றனர்.
நிகழ்ச்சி துவங்க இன்னும் சில நிமிடங்களே உள்ள நிலையில், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் ஸ்டேடியத்தில் கூடியுள்ளனர்.
அதே போல் லியோ சக்ஸஸ் நடக்கும் அரங்கம் முழுக்க வண்ண விளக்குகளால் மின்னுகிறது. அரங்கில் கூடியுள்ள ரசிகர்களும் லைட் அடித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
லியோ படத்தின் தயாரிப்பாளர், செவென் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனர் லலித் குமாரும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிகவும் கவனமாக செய்துள்ளார்.
இஷா அம்பானி முதல் வருண் - லாவண்யா வரை இத்தாலியில் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் இத்தனை பேரா?
அரங்கத்தின் உள்ளேயும் எவ்வித பிரச்சனைகளும் ஏற்பட கூடாது என்பதில் கவனமாக இருக்கும் படக்குழு, போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
தளபதி ரசிகர்களின் ஆர்ப்பரிக்கும் கரகோஷங்களுக்கு நடுவே... வீறுநடை போட்டு வந்து, அமர்வதற்கு அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள சீட் இது தான். அவரை வருகையை தான் ஒட்டு மொத்த ரசிகர்களும் எதிர்நோக்கி கார்த்திருக்கின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D