Dr Priya Death: 8 மாதம் கர்ப்பமாக இருந்த பிரபல சீரியல் நடிகை மாரடைப்பால் மரணம்! நெஞ்சை உலுக்கிய சம்பவம்!
பிரபல சீரியல் நடிகையும், மருத்துவருமான பிரியா 8 மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில், தற்போது திடீர் என மாரடைப்பால் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் வயதினர் பலர் அதிகம் மாரடைப்பால் உயிரிழந்ததாக வெளியாகும் தகவல், கேட்பவர்கள் நெஞ்சங்களையே பதற வைக்கிறது. அதே போல் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பல எதிர்பாராத மரணங்கள் ஏற்பட்டு வருவதை பார்க்க முடிகிறது.
அந்த வகையில் தற்போது, மலையாளத்தில் ஒளிபரப்பான 'கருத்த முத்து' சீரியலில் நடித்து பிரபலமான... ப்ரியா எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவர் ஒரு மருத்துவர் ஆவர். 35 வயதாகும் ப்ரியா, பெங்களூருவை சேர்ந்த சரவணன் என்பவரை சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னர், சின்னத்திரையில் இருந்து விலகி, கணவரின் ஆசை படி MD படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ப்ரியா நேற்று வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்று விட்டு வந்துள்ளார். அதன் பிறகு நன்றாக இருந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ப்ரியா சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில், குழந்தைக்கு தற்போது ICU-வில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தற்போது மலையாள மலையாள திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் அவரது பெற்றோருக்கு ஒரே மகள் என கூறப்படுகிறது. அதே போல் இவர் மீது மிகவும் பாசம் வைத்திருந்த இவரது கணவர் கடந்த 6 மாதமாக அணைத்து பணிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு மனைவியுடன் இருந்து, அவரை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்துள்ளார். ஆனால் மாரடைப்பால் இவர் உயிரிழந்துள்ளது... அவரின் குடும்பத்தை உருகுலையச்செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D