MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • 2023-க்கான டாப் 10 படங்கள் பட்டியல் வெளியீடு... தலைவருடன் சேர்ந்து பாலிவுட் படங்களுக்கு தண்ணி காட்டிய தளபதி

2023-க்கான டாப் 10 படங்கள் பட்டியல் வெளியீடு... தலைவருடன் சேர்ந்து பாலிவுட் படங்களுக்கு தண்ணி காட்டிய தளபதி

இந்திய திரையுலகில் 2023-ம் ஆண்டு ரிலீசாகி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான டாப் 10 படங்களின் பட்டியலை ஐஎம்டிபி நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

2 Min read
Author : Ganesh A
| Updated : Dec 19 2023, 08:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Rajini, vijay

Rajini, vijay

சினிமாவில் விக்கிபீடியாவாக திகழ்ந்து வருவது ஐஎம்டிபி. சர்வதேச அளவில் வெளியாகும் படங்களை தர மதிப்பீடு செய்யும் இந்நிறுவனம், ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் டாப் 10 நடிகர், நடிகைகள், திரைப்படங்கள் ஆகியவற்றின் பட்டியலை வெளியிடும், அந்த வகையில் இந்த ஆண்டு வெளியாகி இந்தியாவில் மிகவும் பாப்புலர் ஆன டாப் 10 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதன் லிஸ்ட்டை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

24
imdb Top 10 most popular movies

imdb Top 10 most popular movies

அதன்படி இந்த பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி உள்ளது இந்தி படங்கள் தான். குறிப்பாக பாலிவுட் பாட்ஷா எனப்படும் ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு ரிலீஸாகி ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்த ஜவான் மற்றும் பதான் ஆகிய திரைப்படங்கள் முதல் இரண்டு இடங்களை தட்டிச் சென்றுள்ளன. இதற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் கரண் ஜோஹர் இயக்கத்தில் ரன்வீர் சிங், ஆலியா பட் நடித்த ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி படம் இடம்பெற்றுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
imdb Top 10 most popular movies list

imdb Top 10 most popular movies list

அதேபோல் அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளிவந்த ஓஎம்ஜி 2 படத்துக்கு 5-வது இடமும், சன்னி தியோ நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன கடர் 2 திரைப்படம் 7-வது இடத்தையும் பிடித்து இருக்கிறது. இந்த டாப் 10 பட்டியலில் இந்த ஆண்டின் மிகவும் சர்ச்சைக்குரிய படமாக திகழ்ந்த தி கேரளா ஸ்டோரிக்கு 8-வது இடம் கிடைத்துள்ளது. இதையடுத்து து ஜூதி மெயின் மக்கார் மற்றும் அஜய் தேவ்கன் இயக்கி நடித்த போலா ஆகிய படங்கள் முறையே 9 மற்றும் 10வது இடத்தை பிடித்துள்ளன.

44
vijay rajinikanth

vijay rajinikanth

இந்த டாப் 10 பட்டியலில் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களுக்கு ஒரு இடம்கூட கிடைக்காதபோதிலும் தமிழ் படங்கள் 2 இடங்களை தட்டிதூக்கி உள்ளன. அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் நான்காவது இடத்திலும், நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்துக்கு 6-வது இடமும் கிடைத்துள்ளது. அஜித்தின் வெற்றிப்படமான துணிவுக்கும் இந்த பட்டியலில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ஸ்டார் ஸ்போர்ட்ஸில் இருந்து விலகலா?... மீண்டும் விஜய் டிவிக்கு வந்ததன் ரகசியத்தை போட்டுடைத்த விஜே பாவனா

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரஜினிகாந்த்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved