சினிமாவில் தொட்டதெல்லாம் ஹிட்டு; இசைப்புயலுக்கு குவியும் துட்டு! ஏ.ஆர்.ரகுமானின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் சொத்து மதிப்பு மற்றும் அவரின் சம்பள விவரம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
AR Rahman
தமிழ் திரையுலகில் இளையராஜா தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்துகொண்டிருந்த சமயத்தில் அவருக்கு எதிராக பாலசந்தரால் இறக்கிவிடப்பட்ட குதிரை தான் ஏ.ஆர்.ரகுமான். பாலச்சந்தரின் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர்.ரகுமான். முதல் படத்திலேயே தன்னுடைய ஆத்மார்த்தமான இசையால் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட ஏ.ஆர்.ரகுமானுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியத் தொடங்கின.
Isaipuyal AR Rahman
தமிழ் சினிமாவில் இவர் தொட்டதெல்லாம் ஹிட்டாக அமைய, படிப்படியாக ஏ.ஆர்.ரகுமானுக்கு பாலிவுட் மற்றும் ஹாலிவுட் பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின. அந்த வகையில் ஸ்லம்டாக் மில்லியனர் என்கிற வெளிநாட்டு படத்துக்காக இவர் இசையமைத்த ஜெய் ஹோ பாடலுக்கு உலகின் உயரிய விருதான ஆஸ்கர் விருது கிடைத்தது. அதுமட்டுமின்றி அப்படத்தின் பின்னணி இசைக்காகவும் விருது வென்று, ஒரே நேரத்தில் இரண்டு ஆஸ்காரை வென்று சரித்திரம் படைத்தார் ரகுமான்.
music director AR Rahman
எவ்வளவு உயரம் சென்றாலும் எல்லா புகழும் இறைவனுக்கே என சொல்லி எளிமையின் சிகரமாக இருந்து வருகிறார் ஏ.ஆர்.ரகுமான். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என இந்தியாவில் பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் இசையமைப்பாளராக அறிமுகமாகி 30 ஆண்டுகளைக் கடந்துவிட்டாலும் இன்றைய தலைமுறையினரை கவரும் வகையில் பாடல்களை கொடுத்து இன்றளவும் டாப் இயக்குனராக திகழ்ந்து வருகிறார் ரகுமான்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
AR Rahman salary
இவர் ஒரு படத்துக்கு இசையமைக்க ரூ.8 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார். இதுதவிர இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இசைக்கச்சேரி நடத்தி அதன் மூலமும் கோடி கோடியாய் சம்பாதித்து வருகிறார். இதுதவிர பாடகராகவும் தன்னுடைய முத்திரையை பதித்து பல்வேறு வெற்றிப்பாடல்களைப் பாடி இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இவரது ஆண்டு வருமானம் மட்டும் ரூ.50 கோடி இருக்குமாம். சராசரியாக ஒரு மாதத்திற்கு ரூ.4 கோடி சம்பாதித்து வருகிறார்.
AR Rahman Net Worth
இதுதவிர மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமாக சொகுசு வீடுகள் உள்ளன. இதுதவிர பிலிம் ஸ்டூடியோ ஒன்றையும் சென்னையில் வைத்திருக்கிறார். அதில் சினிமா படப்பிடிப்புகள் நடத்தப்படும் வசதியும் உள்ளது. அண்மையில் துபாயில் பல கோடி ரூபாய் மதிப்பில் பிரம்மாண்ட இசைக்கூடம் ஒன்றையும் தொடங்கினார். சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ள அந்த இசைக்கூடத்தில் தான் தன்னுடைய இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார் ரகுமான்.
AR Rahman Car collection
இவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ.600 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், ரஜினியைவிட அதிகமாகும். ஏ.ஆர்.ரகுமானிடம் ஜாகுவார், மெர்சிடிஸ் பென்ஸ், வால்வோ போன்ற நிறுவனங்களின் சொகுசு கார்கள் உள்ளன. அந்த கார்கள் ஒவ்வொன்றின் மதிப்பும் 1 முதல் 1.5 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சினிமாவிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... திருமணமான மூன்றே மாதத்தில்... அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் இடையே மோதல் - கோலிவுட்டில் அடுத்த பரபரப்பு