மாஸ் ஹீரோவுடன் ஒரு காம்போ.. மீண்டும் பாலிவுட்டில் கால்பதிக்கும் விஷ்ணுவர்தன் - சைலெண்டாக வெளியான டைட்டில்!
Vishnuvardhan New Movie : தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து, அதன் பிறகு கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான "குறும்பு" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கியவர் தான் விஷ்ணுவர்தன்.
Billa Movie
கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான அஞ்சலி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஷ்ணுவர்தன், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் குலசேகரனின் மகன் ஆவார். இவருடைய தம்பி கிருஷ்ணா குலசேகரன் அவர்களும் தற்பொழுது தமிழ் திரையுலகில் நடிகராக பல படங்களில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே.
Kurumbu movie
தமிழ் மொழியில் வெளியான பல சூப்பர் ஹிட் திரைப்படங்களான சத்ரியன் மற்றும் இருவர் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த விஷ்ணுவர்தன், குறும்பு, அறிந்தும் அறியாமலும், பட்டியல் தல அஜித்தின் பில்லா போன்ற பல நல்ல திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்றவர்.
Actor Krishna
கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் உலகில் பயணித்து வரும் விஷ்ணுவர்தன் இறுதியாக கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான SherShaah என்கின்ற பாலிவுட் திரை படத்தை இயக்கி வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்பொழுது பாலிவுட் உலகின் முன்னணி நடிகராக விளங்கிவரும் சல்மான் கானுடன் அவர் ஒரு படத்தின் இணையவுள்ளார்.
Salman Khan
இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை சல்மான் கான் அவர்களை வெளியிட்டுள்ள நிலையில் இந்த படத்திற்கு The Bull என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே டைகர் என்கின்ற தலைப்பில் பல திரைப்படங்களில் சல்மான் கான் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தை பிரபல பாலிவுட் உலக தயாரிப்பாளர் கரண் ஜோகர் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தடுமாறும் சஞ்சய்... தாமதமாகும் முதல் படம்! விஜய் மகனுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கா?