தடுமாறும் சஞ்சய்... தாமதமாகும் முதல் படம்! விஜய் மகனுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கா?
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆகி வருவதன் ஷாக்கிங் பின்னணியை பார்க்கலாம்.
Jason sanjay, vijay
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். கனடாவில் பிலிம் மேக்கிங் படிப்பை முடித்ததும் சில குறும்படங்களை இயக்கினார் சஞ்சய். இதையடுத்து அவரை சினிமாவில் நடிகனாக களமிறக்க விஜய் ஆசைப்பட, ஆனால் சஞ்சய் தான் இயக்குனர் ஆவேன் என ஒற்றைக்காலில் நின்றதால் விஜய்யும் அவரின் விருப்பத்துக்கே விட்டுவிட்டார்.
Director Jason Sanjay
இதற்காக கதை ஒன்றை தயார் செய்துவந்த சஞ்சய், லைகா நிறுவனத்திடம் தன்னுடைய முதல் படத்துக்கான கதையை சொல்ல, அவர்களும் கதை பிடித்துப்போய் சஞ்சய்யை தங்களது பேனரில் இயக்குனராக அறிமுகம் செய்ய முடிவெடுத்து அவரது முதல் படத்தை தங்கள் தயாரிப்பில் எடுக்க முடிவு செய்தனர். இதையடுத்து இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் சஞ்சய். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Jason sanjay debut movie
ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகி உள்ளதற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் விஜய் ஒரு பதிவு கூட போடாதது விமர்சனத்துக்குள்ளானது. ஆனால் அவையெல்லாம் வெறும் வதந்தி என்றும், மகன் இயக்குனர் ஆனதில் விஜய் செம்ம ஹாப்பி என தளபதி 68 படத்தில் அவருடன் நடித்து வரும் நடிகர் பிரபுதேவா கூறினார். இப்படியான நிலையில், ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் குறித்து அடுத்தகட்ட அப்டேட் வெளிவராமல் இருப்பது ஏன் என்கிற தகவல் கசிந்துள்ளது.
Vijay son Jason Sanjay
அதன்படி ஜேசன் சஞ்சய்க்கு தமிழ் எழுத படிக்க தெரியாதாம், அவர் தன்னுடைய படத்துக்கான ஸ்கிரிப்டை ஆங்கிலத்தில் எழுதி வருவதாகவும், அதனை ஒருவர் மொழி பெயர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதன்காரணமாக தான் அப்படத்தின் பணிகள் தாமதமாகி வருவதாக ஒரு தகவல் கோலிவுட் வட்டாரத்தில் உலா வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஆளப்போறான் தமிழன் என பாட்டுப்பாடிய விஜய் மகனுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கவில்லையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... அவ்ளோ தான் உனக்கு லிமிட்டு... ஆழ்வார்பேட்டை ஆண்டவராக மாறி பூர்ணிமாவுக்கு செம்ம டோஸ் கொடுத்த கமல்