MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பொய்யில்லை நிஜம்தான்.. தரமான ஒரு LCU ஷார்ட் பிலிம் ரெடி - ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த லோகேஷ் கனகராஜ்!

பொய்யில்லை நிஜம்தான்.. தரமான ஒரு LCU ஷார்ட் பிலிம் ரெடி - ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த லோகேஷ் கனகராஜ்!

Lokesh Confirms LCU Short Film : பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்க உள்ள அவருடைய 171 வது திரைப்படத்திற்கான கதையை எழுதி வருகிறார். விரைவில் அந்த படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

1 Min read
Author : Ansgar R
Published : Dec 17 2023, 07:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Vikram Movie

Vikram Movie

இந்த சூழலில் அண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான அவருடைய LCU படங்களை ஒன்றிணைத்து ஒரு குறும்படத்தை அவர் வெளியிட உள்ளதாக சில தகவல்கள் வெளியானது. ஆனால் பலரும் இதை பொய்யான தகவல் என்று கூறிய நிலையில், அந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Rahul Ravi: கள்ளக்காதல் விவகாரத்தில் சிக்கிய 'கண்ணான கண்ணே' சீரியல் ஹீரோ தலைமறைவு! மனைவி பரபரப்பு புகார்!

23
Leo movie

Leo movie

தனது நண்பர் விஜயகுமார் நடிப்பில் வெளியாகியுள்ள "ஃபைட் கிளப்" படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள லோகேஷ் கனகராஜ், ஒரு தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் வெளியிட்ட தகவல் அவருடைய ரசிகர்கள் மத்தியில் ஒரு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம். 

அவர் அந்த பேட்டியில் கூறிய தகவலின்படி லியோ திரைப்படத்தின் ரிலீஸ் முடிந்த உடனேயே தனக்கு கிடைத்த ஒரு சிறிய இடைவெளியில் 15 முதல் 20 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு குறும்படத்தை இயக்கியிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

33
LCU Short Film

LCU Short Film

இது எனது LCU திரைப்படங்களை ஒன்றிணைக்கும் ஒரு குறும்படம் தான், இன்னும் ஓரிரு வாரங்களில் அந்த குறும்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று கூறி தனது ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் அவர் ஆழ்த்தி உள்ளார். இந்த குறும்படத்தில் விக்ரம், ரோலக்ஸ், டெல்லி மற்றும் லியோ தாஸ் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் இடம் பெற்றிருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

செம்ம ஃபாமில் வந்த ஆண்டவர்..! ஒதுக்கப்பட்ட பூர்ணிமா... அசிங்கப்பட்ட ரவீனா! பரபரப்பான பிக்பாஸ் ப்ரோமோ!

About the Author

AR
Ansgar R
கமல்ஹாசன்
கார்த்தி (நடிகர்)
லோகேஷ் கனகராஜ்
தளபதி விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved