அழகிற்கே அழகு சேர்க்கும் நாயகி.. மஞ்சள் நிற ஆடையில் மெய்மறக்க வைக்கும் போஸ் - மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் Clicks!
Actress Malavika Mohanan : தமிழில் இறுதியாக கடந்த 2022ம் ஆண்டு வெளியான தனுஷின் மாறன் திரைப்படத்தில் நடித்திருந்தார் பிரபல நடிகை மாளவிகா மோகனன்.
Malavika Mohanan
கேரளாவில் பிறந்த பிரபல நடிகை மாளவிகா மோகனன், மலையாளத்தில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் கடந்த 2013 ஆம் ஆண்டு திரையுலகில் தனது பயணத்தை துவங்கினார். அதன்பிறகு கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் அவர் நடித்து வந்தார்.
Malavika
இந்த சூழ்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான "பேட்ட" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது தமிழ் திரையுலக பயணத்தை துவக்கிய மாளவிகா மோகனன், தளபதி விஜய் அவர்களின் மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
Actress Malavika
தற்பொழுது தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் நடிகை மாளவிகா மோகனன் நடிப்பில் பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான "தங்கலான்" திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.