MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • குடி போதையில் ஆண் நண்பருடன் ராங் ரூட்டில் வந்து விபத்தை ஏற்படுத்திய எதிர்நீச்சல் மதுமிதா! பரபரக்கும் விசாரணை!

குடி போதையில் ஆண் நண்பருடன் ராங் ரூட்டில் வந்து விபத்தை ஏற்படுத்திய எதிர்நீச்சல் மதுமிதா! பரபரக்கும் விசாரணை!

'எதிர்நீச்சல்' சீரியலில் நடித்து வரும் நாயகி மதுமிதா, குடிபோதையில் கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Feb 26 2024, 08:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் 'எதிர்நீச்சல்'. இந்த தொடரில் ஜனனி என்கிற கதாபாத்திரத்தில் லீடு ரோலில் நடித்து வருபவர் மதுமிதா. கன்னட சீரியலில் அறிமுகமான மதுமிதாவுக்கு அங்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து தெலுங்கில், இவர் நடித்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, தமிழில் 'எதிர்நீச்சல்' சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
 

26

இந்த சீரியலில் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமான மதுமிதாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக சமூக வலைதளத்தில் இவர் எந்த ஒரு புகைப்படத்தை பதிவிட்டாலும், அதற்கு லைக்குகளை லட்சக்கணக்கில் குவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

Not Keerthy Suresh First Choice: 'மகாநடி' படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு முன் நடிக்க இருந்தது இந்த நடிகையா?

36

இது ஒருபுறம் இருக்க, தற்போது இவர் தன்னுடைய ஆண் நண்பருடன் செம்ம போதையில்... அதுவும் ராங் ரூட்டில் வந்து, எதிரே டூ வீலரில் வந்த போலீஸ்காரர் வண்டியில் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம் பேசு பொருளாக மாறி உள்ளது.

46
ethirneechal

ethirneechal

 மேலும் இந்த சம்பவம் குறித்து வெளியாகி உள்ள தகவலில், இந்த விபத்து சோழிங்கநல்லூர் பக்கத்தில் இருக்கும் இடத்தில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அங்குள்ள ஒரு வழி பாதையில் அதுவும் ராங் ரூட்டில் தன்னுடைய ஆண் நண்பருடன் மதுமிதா வந்து கொண்டிருக்கும்போது தான் இந்த விபத்து நேர்ந்துள்ளது.  விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த இடத்திற்கு வந்த போலீசார், அடிபட்ட போலீசை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

விஜய் டிவி சீரியலுக்காக... வாய்ப்பு கொடுத்த சன் டிவி தொடருக்கு குட்பை சொன்ன நடிகை! விலக இது தான் காரணமாம்!


 

56

 இந்த விபத்து குறித்து மதுமிதாவையும் அவருடைய நண்பரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து போய் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்க்கு ராங் ரூட்டில் வந்த எங்கள் மீது தப்பு இல்லை... எதிரே வந்த போலீஸ் தான் வேகமாக வந்து காரில் மோதினார் என சப்ப கட்டு கட்டியதாக கூறப்படுகிறது. இந்த விபத்து நடந்து இரண்டு நாட்கள் ஆகியும் மதுமிதா தரப்பில் இந்த விஷயம் வெளியே போகாமல் பார்த்து கொள்கிறார்களாம். 

66

அரசால் புரசலாக கேள்வி பட்டு, மதுமிதாவுக்கு யாரேனும் போன் போட்டு இந்த விபத்து குறித்து விசாரித்தால் கூட, 'ஆமாம் அது ஒரு சின்ன ஆக்சிடென்ட்... என் நண்பர் பண்ணிட்டாரு. பெருசா இதுல பேச எதுவும் இல்லை என படக் என போனை கட் செய்து விடுகிறாராம். இந்த விஷயம் தான் தற்போது காட்டு தீ போல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

வித்தியாசமான முகங்கள்..! பாலிவுட் போனதும்... அல்ட்ரா மாடர்ன் பேபியாக மாறிய கீர்த்தி சுரேஷ்! லேட்டஸ்ட் போட்டோஸ்

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சன் தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved