இசை ஞானியின் இசையில் "நினைவெல்லாம் நீயடா" மனிஷா கலக்கிய "வெச்சேன் நான் முரட்டு ஆசை" வீடியோ சாங் வெளியானது!
Ninaivellam Neyada : ஆதிராஜன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள படம் தான் நினைவெல்லாம் நீயடா. இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி 23ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இயக்குனர் ஆதிராஜன் இயக்கத்தில் பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர் பிரஜின் பத்மநாபன், நடிகை மனிஷா, மறைந்த மூத்த நடிகர் மனோபாலா மற்றும் ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் உருவாகி, கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் "நினைவெல்லாம் நீயடா" என்கின்ற திரைப்படம்.
தனது இளம் வயது காதலுக்காக காத்திருக்கும் காதலன், அதே நேரத்தில் தனது குடும்பத்தில் தனக்கு பார்த்திருக்கும் பெண்ணை திருமணம் செய்ய தயக்கத்தோடு இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக இது அமைந்திருக்கிறது. இளையராஜாவின் இசையில் இந்த திரைப்படத்தில் உருவான அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள "வெச்சேன் நான் முரட்டு ஆசை" என்கின்ற பாடலின் வீடியோ இப்பொழுது வெளியாகி உள்ளது. நடிகை மனிஷா இந்த படம் வெளியாவதற்கு முன்பாக தனக்கு சேரவேண்டிய சம்பளம் 3 லட்சம் இன்னும் வரவில்லை என்று புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.