ரஜினி முதல்.. கேப்டன் வரை.. 30 வருடங்களுக்கு முன்பு கோலிவுட் ஹீரோஸ் வாங்கிய சம்பளம் என்ன? வைரலாகும் பதிவு!
Kollywood Hero's Salary in 1990s : தமிழ் மக்களால் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்ட விஜயகாந்தின் மறைவை ஒட்டுமொத்த திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து பல நல்ல பழைய நினைவுகள் இணையத்தில் நினைவுகூரப்பட்டு வருகின்றது.
Captain Vijayakanth Funeral
தமிழ் திரை உலகில் முன்னணி நாயகனாகவும், அரசியல் வாழ்க்கையில் மிகச் சிறந்த ஆளுமையாகவும் திகழ்ந்து வந்த கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைந்துள்ளது மிகப்பெரிய சோகத்தை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தி உள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் நடிகர் விஜயகாந்த் இந்த மண்ணை விட்டு பிரிய உள்ள நிலையில் அவர் குறித்த பல தகவல்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.
Super Star Rajini
அதன் ஒரு பகுதியாக 1990களில் அப்போது நடிப்பின் உச்சத்தில் இருந்த நடிகர் நடிகைகளின் சம்பள பட்டியல் தற்பொழுது வெளியாகி உள்ளது. இதில் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் மற்றும் ராம்கி உட்பட பல கிளாசிக் நடிகர்கள் 1990 ஆம் ஆண்டுகளில் அவர்கள் வாங்கிய சம்பள விவரங்கள் வெளியாகி உள்ளது அந்த தகவல்கள் பின்வருமாறு.
Actors Salary list
ரஜினிகாந்த் அவர்கள் படத்திற்கு 60 லட்சம் ரூபாய், கமலஹாசன், விஜயகாந்த் மற்றும் சத்யராஜ் ஆகியோர் படத்திற்கு 20 லட்சம் ரூபாயும், இளைய திலகம் பிரபு 15 லட்சமும், நடிகர் நவரச நாயகன் கார்த்திக் 10 லட்சமும், ராமராஜன் 2 லட்சமும், ரகுமான் 4 லட்சமும், ராம்கி, முரளி, ஜனகராஜ் மற்றும் கவுண்டமணி 4 லட்சம் ரூபாயும், நடிகை குஷ்பூ 3 லட்சம் ரூபாயும், கௌதமி 1.5 லட்சம் ரூபாயும், பானுப்பிரியா 2 லட்சம் ரூபாயும், ரூபினி, சில்க் ஸ்மிதா, நிரோஷா ஆகியோர் 1லட்சம் ரூபாயும் சம்பளமாக வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.