MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • தகுதிச் சுற்று போட்டியில் ஜெயிக்கணும் – கவுகாத்தியில் மா காமாக்யா கோயிலில் கேகேஆர் வீரர்கள் சாமி தரிசனம்!

தகுதிச் சுற்று போட்டியில் ஜெயிக்கணும் – கவுகாத்தியில் மா காமாக்யா கோயிலில் கேகேஆர் வீரர்கள் சாமி தரிசனம்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் தகுதிச் சுற்று போட்டியில் வெற்றி பெற வேண்டி கவுகாத்தியிலுள்ள மா காமாக்யா கோயிலில் கேகேஆர் வீரர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

2 Min read
Author : Rsiva kumar
Published : May 20 2024, 05:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. இதுவரையில் நடைபெற்ற 70 லீக் போட்டிகளைத் தொடர்ந்து நாளை முதல் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நடைபெற இருக்கிறது. கேகேஆர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

இந்த தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடிய 14 போட்டிகளில் 9ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்துள்ளது. அதோடு 2 போட்டிகளுக்கு முடிவு இல்லை. மேலும், புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

37
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

கடைசியாக நேற்று நடைபெற இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியானது மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் இரு அணிகளுக்கும் ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதன் மூலமாக கொல்கத்தா அணி 20 புள்ளிகள் பெற்றது.

47
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

லீக் போட்டிகள் முடிந்த நிலையில் நாளை முதல் தகுதிச் சுற்று போட்டி நடைபெறுகிறது. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணி 2ஆவது தகுதிச் சுற்று போட்டியில் விளையாடும்.

57
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 26 போட்டிகளில் 17 போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த சீசனில் இரு அணிகளும் மோதிய ஒரு போட்டியிலும் கேகேஆர் வெற்றி பெற்றுள்ளது.

67
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

முதல் முறையாக இரு அணிகளும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றன. இந்த மைதானத்தில் இதுவரையில் நடைபெற்ற 33 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 15 போட்டியிலும், சேஸ் செய்த அணி 18 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த சீசனில் இந்த மைதானத்தில் நடைபெற்ற 6 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 2 போட்டியிலும், 2ஆவது பேட்டிங் செய்த அணி 4 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

77
KKR vs SRH IPL 2024 Qualifier 1

KKR vs SRH IPL 2024 Qualifier 1

இந்த நிலையில் தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் தகுதிச் சுற்று போட்டியில் வெற்றி பெற வேண்டி கேகேஆர் வீரர்கள் கவுகாத்தியிலுள்ள மா காமாக்யா கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். ஹர்ஷித் ராணா, நிதிஷ் ராணா, சுயாஷ் சர்மா, ரமன்தீப் சிங், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்த இவர்கள் நெற்றியில் குங்குமத்துடனும், கழுத்தில் மாலையுடனும் காணப்பட்டனர்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
இந்தியன் பிரீமியர் லீக்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
சுனில் நரைன்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved