MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • KGF எனும் மூன்றெழுத்து மந்திரத்தால் மாறிய வாழ்க்கை... ஒரே படத்தால் ஓஹோனு வாழும் யாஷின் சொத்து மதிப்பு இதோ

KGF எனும் மூன்றெழுத்து மந்திரத்தால் மாறிய வாழ்க்கை... ஒரே படத்தால் ஓஹோனு வாழும் யாஷின் சொத்து மதிப்பு இதோ

கே.ஜி.எப் படம் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆன கன்னட நடிகர் யாஷின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Nov 22 2023, 02:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
KGF hero yash

KGF hero yash

கர்நாடக மாநிலத்தில் உள்ள பூவனஹல்லி என்கிற குக்கிராமத்தில் பிறந்தவர் தான் யாஷ். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் நவீன் குமார் கவுடா. பின்னர் நாடகங்களில் நடிப்பதற்காக தன்னுடைய பெயரை யாஷ் என மாற்றிக்கொண்டார். பின்னர் அதுவே அவருக்கு அடையாளமாக மாறியது. நாடக கலைஞராக நடித்துவந்த யாஷுக்கு சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து கன்னட சீரியல்களில் நடித்து வந்த யாஷ், கடந்த 2008-ம் ஆண்டு சினிமாவுக்குள் நுழைந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
kannada actor yash

kannada actor yash

கன்னடத்தில் அவர் முதன்முதலில் நடித்த திரைப்படம் ராக்கி. அப்படம் தோல்வி அடைந்ததை அடுத்து பிற மொழி படங்களை ரீமேக் செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டினார் யாஷ். அந்த வகையில் தமிழில் விமல், ஓவியா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன களவாணி படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்தார் யாஷ். தமிழைப்போல் இப்படம் கன்னடத்திலும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

36
yash salary

yash salary

இதையடுத்து சில ஆண்டுகள் வெற்றி, தோல்வி என சென்றுகொண்டிருந்த யாஷின் சினிமா கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது கே.ஜி.எப் தான் கடந்த 2018-ம் ஆண்டு கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகம் வெளிவந்தது. கன்னட படம் என்பதால் ஆரம்பத்தில் புறக்கணித்த சினிமா ரசிகர்கள், பின்னர் அதற்கு பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்ததை பார்த்து அப்படத்தை கொண்டாடினர். இப்படம் பான் இந்தியா அளவில் மாஸ் ஹிட் அடித்தது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

46
yash net worth

yash net worth

இதையடுத்து கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவித்த படக்குழு, முதல் பாகத்தைவிட பிரம்மாண்டமாக அப்படத்தை எடுத்து கடந்த ஆண்டு ரிலீஸ் செய்தனர். அவர்கள் எதிர்பார்த்தது படியே படமும் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது. தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தையே ஓரம்கட்டியது கே.ஜி.எஃப் 2. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1100 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்து வெற்றிவாகை சூடியது.

56
yash car collection

yash car collection

கே.ஜி.எப் படம் தான் நடிகர் யாஷின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் முதல் பாகத்திற்காக அவருக்கு வெறும் ரூ.4 கோடி சம்பளம் பேசப்பட்டு இருந்தாலும், ரிலீசுக்கு பின்னர் அவருக்கு ரூ.15 கோடி வழங்கப்பட்டது. அதேபோல் இரண்டாம் பாகத்துக்கு சம்பளத்தை டபுள் மடங்கு கூட்டிய யாஷ் ரூ.30 கோடி சம்பளம் வாங்கி இருந்தார். அடுத்த படங்களுக்கு அவர் ரூ.50 கோடி வரை சம்பளம் வாங்க உள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.

66
yash upcoming movies

yash upcoming movies

இப்படி கே.ஜி.எப் எனும் ஒற்றை படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற நடிகர் யாஷின் சொத்து மதிப்பு ரூ.53 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இவர் கே.ஜி.எப் படம் வெற்றியடைந்ததும் பெங்களூருவில் ரூ.4 கோடிக்கு சொகுசு பங்களா ஒன்றையும் சொந்தமாக வாங்கி இருந்தார். அதுமட்டுமின்றி இவரிடம் ஆடி, ரேஞ்ச் ரோவர், பென்ஸ் என ஏராளமான சொகுசு கார்களும் உள்ளன. இப்படி ஒரே படத்தின் மூலம் ஓஹோனு வாழ்ந்து வரும் யாஷ், அடுத்ததாக ராமயணத்தை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... மன்சூர் அலிகான் சர்ச்சைக்கு மத்தியில் பான் இந்தியா ஹீரோ படத்தை தட்டிதூக்கிய திரிஷா - பட்ஜெட் மட்டும் 300 கோடி!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
யாஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved