Malayalam English Kannada Telugu Tamil Bangla Hindi Marathi
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மன்சூர் அலிகான் சர்ச்சைக்கு மத்தியில் பான் இந்தியா ஹீரோ படத்தை தட்டிதூக்கிய திரிஷா - பட்ஜெட் மட்டும் 300 கோடி!

மன்சூர் அலிகான் சர்ச்சைக்கு மத்தியில் பான் இந்தியா ஹீரோ படத்தை தட்டிதூக்கிய திரிஷா - பட்ஜெட் மட்டும் 300 கோடி!

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கும் திரிஷா, அடுத்ததாக பான் இந்தியா ஸ்டார் ஒருவருடன் ஜோடி சேர உள்ளாராம்.

Ganesh A | Published : Nov 22 2023, 08:47 AM
2 Min read
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • Google NewsFollow Us
14
Trisha

Trisha

தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வந்துகொண்டிருப்பவர் திரிஷா. அவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் 2, லியோ ஆகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. இதையடுத்து நடிகை திரிஷாவுக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது நடிகை திரிஷா நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் தயாராகி வருகிறது. இதில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார் திரிஷா.

24
Trisha Next movie

Trisha Next movie

அதுமட்டுமின்றி நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார் திரிஷா. இப்படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். இப்படத்தில் திரிஷா உடன் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்திற்காக நடிகை திரிஷா ரூ.12 கோடி சம்பளம் வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படி டாப் பார்மில் இருக்கும் திரிஷாவுக்கு மேலும் ஒரு ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Allu Arjun

Allu Arjun

அதன்படி தெலுங்கில் புஷ்பா என்கிற மாஸ் ஹிட் படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்துள்ள நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக தான் திரிஷா நடிக்க உள்ளாராம். இப்படத்தை பிரபல டோலிவுட் இயக்குனர் திரிவிக்ரம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராக உள்ளதாம். வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக இது தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

44
Trisha Krishnan

Trisha Krishnan

நடிகை திரிஷாவுக்கு இதுதவிர பாலிவுட்டில் இருந்தும் பட வாய்ப்பு வருகிறதாம். அவர் சல்மான் கானுக்கு ஜோடியாக ஒரு இந்தி படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் தமிழ், தெலுங்கி, இந்தி என பான் இந்தியா நடிகையாக பிசியாக நடித்து வருகிறார் திரிஷா. மன்சூர் அலிகான் சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவுக்கு தெலுங்கில் இப்படி ஒரு பிரம்மாண்ட வாய்ப்பு கிடைத்துள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... மகள் கார்த்திகாவுக்கு கிலோ கணக்கில் நகைகளை போட்டு திருமணம் செய்த.. நடிகை ராதா Net Worth எவ்வளவு தெரியுமா

Ganesh A
About the Author
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். Read More...
அல்லு அர்ஜுன்
திரிஷா
 
Recommended Stories
Top Stories