- Home
- Gallery
- Star Movie Release Date: குறிச்சு வச்சுக்கோங்க! வித்யாசமாக ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த நடிகர் கவின்
Star Movie Release Date: குறிச்சு வச்சுக்கோங்க! வித்யாசமாக ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த நடிகர் கவின்
தான் நடித்து முடித்துள்ள 'ஸ்டார்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார் கவின்.

இளவட்ட ரசிகர்களை கவரும் விதத்தில் வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான காதல் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் கவின். குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், இவர் நடிப்பில் வெளியான லிஃப்ட், டாடா, போன்ற படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதைத்தொடர்ந்து இயக்குனர் இலன் இயக்கத்தில், கவின் நடித்துள்ள திரைப்படம் ஸ்டார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே முடிவடைந்து... போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது.
Kavin
இந்நிலையில், இன்று மாலை இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படத்தின் நாயகனான கவின் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மிகவும் வித்தியாசமாக தன்னுடைய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், "காலண்டர், டைரி, போன், இல்ல மனசுல.... எதுல முடியுமோ குறிச்சு வச்சுக்கோங்க, மே 10 முதல் ஸ்டார். என தெரிவித்துள்ளார்.
கோடை விடுமுறையை முன்னிட்டு இப்படம் வெளியாக உள்ளது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே கவின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படங்களால் இப்படத்தின் மீதும் ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்தில் கவின் ஜோடியாக அதிதி பொலங்கர் நடித்துள்ளார். மேலும் லால், ப்ரீத்தி முகுந்தன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எழிலரசு ஒளிப்பதிவில், பிரதீப் படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.