பல்லவி பற்றிய உண்மையை உடைத்த கார்த்திக்... கண்ணீர்விட்டு அழுத தீபா - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் மாயா கார்த்தியை பார்க்க ஆபீஸ் வந்த நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம்.
Karthigai deepam serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் மாயா கார்த்தியை பார்க்க ஆபீஸ் வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது கார்த்திகை சந்திக்கும் மாயா நான் நட்சத்திராவோட தங்கச்சி என தன்னை அறிமுகம் செய்து கொள்கிறாள்.
மேடம் உன்னையும் தீபாவையும் பிரிக்காமல் விடமாட்டேன். உங்க வாழ்க்கைய உரு குலைப்பேன் என்று சவால் விடுகிறாள். அபிராமி வாயாலேயே தீபாவ வீட்டை விட்டு வெளியே தரட்டுவேன் என்று சொல்ல கார்த்திக் உன்னால முடிந்ததை பாத்துக்கோ என பதிலுக்கு சவால் விடுகிறான். அதைத்தொடர்ந்து மாயா ஐஸ்வர்யா மற்றும் ரூபஸ்ரீ என மூவரும் ஒரு ரெஸ்டாரண்டில் சந்திக்கின்றனர்.
Zee Tamil Karthigai deepam serial
தீபாவின் வாழ்க்கை அழிக்க நாம மூணு பேரும் சேர்ந்து தான் சில வேலைகள் செய்யணும் என்று கை கோர்க்கின்றனர். இதனைத் தொடர்ந்து வீட்டில் தீபாவின் பிறந்த நாளுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க தீபாவின் பெயருக்கு ஒரு கொரியர் வருகிறது. கார்த்திக் போய் வாங்கி பிரிச்சு பாருங்க என்று சொல்லி அனுப்பி வைக்க தீபாவும் அதை வாங்கி பிரிக்க உள்ளே புடவை இருக்கிறது.
அதை கட்டிக்கிட்டு கேக் கட் பண்ண வாங்க என்று சொல்லும் கார்த்திக் புடவை கட்டிக் கொள்ளும்போது தீபாவிற்கும் உதவி செய்கிறான். அதோட தீபாவுக்கு மேக்கப் போட்டு விடுவதாக சொல்ல அவள் உங்களுக்கு மேக்கப் போட தெரியுமா என்று கேட்க அபிராமி காஸ்மெட்டிக் கம்பெனி நடத்துறவனுக்கு மேக்கப் போடத் தெரியாதா? எங்க அம்மாவுக்கு எல்லாம் நிறைய நான் தான் மேக்கப் போட்டு விட்டு இருக்கேன் என்று சொல்லி தீபாவுக்கு மேக்கப் போட்டு விடுகிறான்.
இதையும் படியுங்கள்... சௌந்தரபாண்டி வீசிய வலையில் வாண்டடாக வந்து விழுந்த ஷண்முகம்.. அண்ணா சீரியலில் காத்திருக்கும் அதிர்ச்சி
Karthigai deepam serial Update
பிறகு பர்த்டே பார்ட்டி தொடங்குகிறது தீபா கேக்கை வெட்ட அருணாச்சலம் பல்லவி வரதா சொன்னீயே எங்கே என்று கேட்க தீபா அதிர்ச்சி அடைகிறாள். யார் வரப் போறாங்கன்னு தெரியலையே என்று யோசிக்க கார்த்திக் தீபா தான் அந்த பல்லவி என்ற உண்மையை உடைக்க எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
மீனாட்சி, அருணாச்சலம் ஆகியோர் சந்தோஷப்பட அபிராமி இவ்வளவு பெரிய உண்மையை மறைத்திருக்கனா நீ எவ்வளவு பெரிய கல் நெஞ்ச காரியா இருப்ப என கோபப்படுகிறாள். பிறகு கார்த்திக் தீபா தம்பிக்காக பாட ஒத்துக்கிட்டா. இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்னு சத்தியம் செய்ததால் யார்கிட்டயும் சொல்லாம இருந்தா, அவளை நான் பெரிய பாடகி ஆக்குவேன் என்று சொல்கிறான்.
Karthigai deepam serial Today Episode
அதுமட்டுமின்றி நம்ம கம்பெனியில மட்டும் இல்லாம மத்த நிறைய கம்பெனிகள்ல தீபாவ பாட வைப்பேன் என்று சொல்ல அபிராமி நம்ப கம்பெனியில் பாடுனா போதாதா என்று கேட்க மற்றும் கம்பெனிகளில் பாடினால் தீபாவால் நம்ம குடும்பத்துக்கு தான் பெருமை என்று சொல்கிறான்.
இதைத்தொடர்ந்து தீபா கண்ணீருடன் ரூமுக்கு சென்று விட கார்த்திக் பின்னாடியே வர காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறாள் தீபா. நானே உங்ககிட்ட இந்த விஷயத்தை சொல்லலாம்னு தான் இருந்தேன் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குன்னு சொல்லி இருந்ததும் இதைப் பற்றி சொல்ல தான் என்று கண் கலங்கி அழுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... 22 வருடங்களாக தொடரும் நட்பு... இணையத்தை கலக்கும் மெட்டி ஒலி சிஸ்டர்ஸின் ரீ-யூனியன் போட்டோஸ்