MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • தீபாவளி ரேஸில் தோற்றதால்... ஓடிடியில் ஜிகர்தண்டாவுடன் போட்டி போடாமல் சோலோவாக ரிலீஸ் ஆகும் ஜப்பான்

தீபாவளி ரேஸில் தோற்றதால்... ஓடிடியில் ஜிகர்தண்டாவுடன் போட்டி போடாமல் சோலோவாக ரிலீஸ் ஆகும் ஜப்பான்

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 05 2023, 12:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
japan movie

japan movie

தமிழ் திரையுலகில் தொடர் வெற்றிகளை ருசித்து வந்த நடிகர் கார்த்தி, இந்த ஆண்டு சோலோ ஹீரோவாக நடித்த படம் ஜப்பான். இப்படத்தை ராஜு முருகன் இயக்கினார். இவர் ஏற்கனவே குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி போன்ற படங்களை இயக்கியவர் ஆவார். அவர் இயக்கத்தில் முதன்முறையாக நடிகர் கார்த்தி நடித்த இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரித்து இருந்தார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்திருந்தார்.

24
karthi movie japan

karthi movie japan

ஜப்பான் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். இது நடிகர் கார்த்தியின் 25-வது படம் என்பதால் இப்படத்தை பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிட்ட படக்குழு, தீபாவளிக்கு வெளியிட்டது. தீபாவளி ரேஸில் நடிகர் ராகவா லாரன்ஸின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துக்கு போட்டியாக ஜப்பான் படம் ரிலீஸ் ஆனது. கடந்தாண்டு தீபாவளிக்கு கார்த்தி நடித்த சர்தார் படம் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை ருசித்ததை போல் ஜப்பான் படமும் வெற்றிபெறும் என ரசிகர்கள் ஆவலோடு இருந்தனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Japan, jigarthanda 2

Japan, jigarthanda 2

ஆனால் ரசிகர்களின் கனவில் மண்ணை அள்ளிப்போடும் விதமாக ஜப்பான் படத்தின் ரிசல்ட் அமைந்தது. இப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று படுதோல்வியை சந்தித்தது. நடிகர் கார்த்தியின் கெரியரில் மிகப்பெரிய தோல்விப்படம் ஜப்பான் என்றும் கூறப்படுகிறது. மறுபுறம் இந்த படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆன ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு ரூ.50 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது.

44
japan OTT release

japan OTT release

தீபாவளி ரேஸில் ஜிகர்தண்டா உடன் போட்டிபோட்டு ரிலீஸ் ஆன ஜப்பான் திரைப்படம், தற்போது ஓடிடியில் அப்படத்துடன் மல்லுக்கட்ட விரும்பாமல் தனியாக ரிலீஸ் ஆக உள்ளது. இதில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வருகிற டிசம்பர் 8-ந் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், ஜப்பான் திரைப்படம் டிசம்பர் 11-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களுமே நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... அடித்து ஆடிய மிக்ஜாம் புயல்... பிக்பாஸ் வீட்டிலும் வெள்ளம் புகுந்ததா? ஹவுஸ்மேட்ஸ் வைத்த உருக்கமான வேண்டுகோள்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜப்பான்
கார்த்தி (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved