MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அடித்து ஆடிய மிக்ஜாம் புயல்... பிக்பாஸ் வீட்டிலும் வெள்ளம் புகுந்ததா? ஹவுஸ்மேட்ஸ் வைத்த உருக்கமான வேண்டுகோள்

அடித்து ஆடிய மிக்ஜாம் புயல்... பிக்பாஸ் வீட்டிலும் வெள்ளம் புகுந்ததா? ஹவுஸ்மேட்ஸ் வைத்த உருக்கமான வேண்டுகோள்

சென்னையையே புரட்டி போட்ட மிக்ஜாம் புயலால் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்கள் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.

2 Min read
Ganesh A
Published : Dec 05 2023, 11:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Bigg Boss contestants

Bigg Boss contestants

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி தற்போது 60 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தற்போது பிக்பாஸ் வீட்டில் 13 போட்டியாளர்கள் எஞ்சி உள்ளனர். அவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதுவும் இந்த வார எவிக்‌ஷனுக்காக வெறும் 5 பேர் மட்டுமே நாமினேட் ஆகி உள்ளதால் ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

24
Bigg Boss house

Bigg Boss house

இந்த வார எவிக்‌ஷனில் சுமால் பாஸ் வீட்டில் இருந்து நிக்சன் மட்டும் நாமினேட் ஆனார். அதேபோல் பிக்பாஸ் வீட்டில் இருந்து விசித்ரா, மணி, தினேஷ், அர்ச்சனா ஆகியோர் நாமினேட் ஆகி உள்ளனர். இவர்கள் 5 பேரில் இருந்து ஒருவர் தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற உள்ளனர். சென்னையில் மிக்ஜாம் புயல் துவம்சம் செய்துள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டில் நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை அறிய ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Bigg Boss Tamil season 7

Bigg Boss Tamil season 7

ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிக்பாஸ் வீட்டிற்குள் வெள்ளம் புகுந்ததால் போட்டியாளர்கள் நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்ட சம்பவங்களும் அரங்கேறின. அதேபோல் இந்த ஆண்டும் பெருமழை வெளுத்து வாங்கி இருந்தாலும் பிக்பாஸ் வீடு வெள்ளத்தில் சிக்காமல் பாதுகாப்பாக உள்ளது என்பதை போட்டியாளர்களே உறுதிப்படுத்தி உள்ளனர். அதுமட்டுமின்றி வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை மக்களுக்காக அவர்கள் முக்கிய வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்து உள்ளனர்.

44
Dinesh

Dinesh

இதுகுறித்து தினேஷ் பேசியுள்ளதாவது : “வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும்போது பார்த்து பாதுகாப்பா போங்க. ஆங்காங்கே மரங்கள் விழுந்திருக்கும், வயர் கட் ஆகி கிடக்கும், மழைல ரொம்ப ரிஸ்க் எடுக்காதீங்க. எங்களுக்காக உழைக்குறவங்களும் பாதுகாப்பா இருக்கனும். அதேநேரத்தில் எங்கள் நிகழ்ச்சியை பார்க்கும் ஆடியன்ஸுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், நாங்க இங்க பாதுகாப்பாக இருந்தாலும் எங்க நினைப்பு எல்லாமே வெளியில் தான் உள்ளது.

எல்லாருமே சென்னை வெள்ளத்தை பார்த்திருக்கிறோம். எல்லாரும் ஒருத்தருக்கொருத்தர் பாத்துக்கோங்க. இதுதான் இங்க இருந்து எங்களால சொல்ல முடியும், கண்டிப்பா உங்களுக்காக நாங்க எல்லாருமே வேண்டிக்கொள்கிறோம்  என கூறி உள்ளார். அவரோடு அர்ச்சனா, விசித்ரா, மாயா, கூல் சுரேஷ், மணி, விஷ்ணு ஆகியோரும் உடனிருந்து சென்னை மக்களுக்காக பிரார்த்தனை செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... கேப்டன் விஜயகாந்த் நலம் பெற வேண்டி மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved