Indian 2: சேனாதிபதியின் கையெழுத்தோடு வெளியான 'இந்தியன் 2' படத்தின் அப்டேட்! குஷியான கமல் ரசிகர்கள்..!
உலக நாயகன் கமல்ஹாசன், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ள 'இந்தியன் 2' படம் குறித்த அப்டேட் நாளை வெளியாகும் என, போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'இந்தியன் 2'. 1996 ஆம் ஆண்டு வெளியான 'இந்தியன்' படத்தின் தொடர்ச்சியாக தற்போது இப்படம் உருவாகியுள்ளது. சுமார் 27 வருடங்களுக்கு பின்னர், 'இந்தியன் 2' படம் எடுக்கப்பட்டுள்ளதால் இப்படத்தை பார்க்க மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கார்த்திருக்கின்றனர் உலக நாயகன் ரசிகர்கள்.
இந்த படம் குறித்த அறிவிப்பு 2017 ஆம் ஆண்டே அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் படப்பிடிப்பும் மிக பிரமாண்டமாக 2018 ஆம் ஆண்டு துவங்கியது. சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் பயன்படுத்திய ராட்சத கிரேன் கிழே விழுந்து விபத்திற்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டு மொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது.
அதனை தொடர்ந்து கொரோனா, உள்ளிட்ட பிரச்சனைகளால் படம் எடுத்து முடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இயக்குனர் ஷங்கருக்கும், ஒரு கட்டத்தில் 'இந்தியன் 2' படத்தை கிடப்பில் போட்டு விட்டு, ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தின் படத்தை இயக்க சென்றார். பின்னர் இதற்க்கு எதிராக லைகா வழக்கு தொடரவே, மீண்டும் 'இந்தியன் 2' படத்தின் படத்தை இயக்க உள்ளதாக ஷங்கர் அறிவிக்க, படப்பிடிப்பும் துவங்கியது.
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இப்படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் கமல்ஹாசனின் ரசிகர்கள் அவ்வப்போது, இப்படம் குறித்த அப்டேட் குறித்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், 'இந்தியன் 2' அப்டேட் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை குஷியாக்கியுள்ளது .
Received copy என்றும், சேனாதிபதியின் கையெழுத்தோடு, நாளை காலை 11 மணிக்கு 'இந்தியன்' 2 படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என போஸ்டர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. டீசர் குறித்த அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது. லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பேனர்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் , கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மேலும் ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சித்தார்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க, ரத்னவேலு படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். முத்துராஜ் கலை இயக்குனராக பணியாற்றியுள்ள நிலையில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D