வசூலில் பாலிவுட்டை மிரள வைத்த அட்லீ..! இத்தனை கோடி வசூல் செய்த முதல் ஹிந்திப்படம் இது தான்! படக்குழு அறிவிப்பு
ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படம் இதுவரை எந்த ஒரு ஹிந்தி படமும் செய்திடாத வசூலை செய்துள்ளதாக, படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
Jawan Create Record
ஒரே ஆண்டில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான இரண்டு படங்களும் தலா 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்திருப்பதுடன்.. சமீபத்தில் வெளியான ஜவான் ஒட்டு மொத்த ஹிந்தி படங்களின் சாதனையையும் முறியடித்துள்ளதாக தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
Jawan story Inspired by fans
ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை மறு வரையறை செய்துள்ளது. இப்படத்தின் கதைக்களம் மற்றும் நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பு மூலம் பார்வையாளர்களை வசீகரித்துள்ளது. சாதனை புத்தகத்தில் புதிய அத்தியாயத்தை இந்த திரைப்படம் எழுதி இருக்கிறது. ஜவான் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதால், இப்படத்தின் வசூல் புதிய சாதனையை படைக்கும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படத்திற்கு நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடமிருந்து அபிரிமிதமான வரவேற்பு கிடைத்து வருவதால் சந்தேகத்திற்கு இடமின்றி இந்தத் திரைப்படம் மாபெரும் சினிமா ஆற்றலாக மாறியுள்ளது என்பது மிகையல்ல.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Sharukkhan Fans Celebrated Jawan
மேலும் இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வசூல் செய்து வந்தது. இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள ஷாருக்கான் ரசிகர்களுக்கு 'ஜவான்' திரைப்படத்தை ஒரு சினிமா திருவிழாவை போல் கொண்டாடி வந்ததையும் பார்க்க முடிந்தது. குறிப்பாக தென்னிந்தியாவை விட வட இந்தியாவில், இன்னும் பல திரையரங்குகளில் இப்படம் வெற்றிநடை போட்டு வருகிறது.
Jawan Crossed 1100 Cr
படம் வெளியான 19 நாட்களில் 1000 கோடியை எட்டிய இந்த படம், தற்போது ஒரே மாதத்திற்குள் ஒட்டு மொத்த ஹிந்தி படத்தின், சாதனைகளையும் முறியடித்துள்ளது. அதாவது இதுவரை எந்த படமும் 1100 கோடியை எட்டிடாத நிலையில், இந்த படம் 1103 கோடி வசூலித்துள்ளதாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது படக்குழு.
Meena Kumari: 'கயல்' சீரியல் நடிகை மீனா குமாரி வீட்டில் நடந்த விசேஷம்! வைரலாகும் புகைப்படங்கள்!
Firs Hindi Film Collect 1103 Cr
'ஜவான்' திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மெண்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.