Dengue : தமிழகம்.. 9 மாவட்டங்களில் அதிகரித்த டெங்கு.. வழிகாட்டுதல் வெளியீடு - நம்மை காத்துக்கொள்வது எப்படி?
Dengue In Tamil Nadu : தமிழகத்தில் 9 மாவட்டங்களில் டெங்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சில வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவண்ணாமலை, அரியலூர், நாமக்கல், தேனி, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே டெங்கு காய்ச்சலின் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களும் பொது சுகாதாரத் துறை இயக்குனர் சார்பில் வழிகாட்டுதல்கள் அனுப்பப்பட்டுள்ளது.
இதன்படி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் குறித்த விவரங்களை தினசரி அரசு பதிவேட்டில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாவட்டம் வாரியாக தொடர்ந்து டெங்கு பாதிப்புகள் குறித்தான விவரங்கள் சேகரிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட வேண்டும். அது மட்டுமல்லாமல் இன்சுலென்ஸா மற்றும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட உள் நோயாளிகளும் மற்றும் பொதுவான அறிகுறிகள் உள்ளவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.
Mass Suicide: கேட்பாரற்று நின்ற காரில் அடுத்தடுத்து 3 சடலங்கள்; தேனியில் பெரும் பரபரப்பு
டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் என்னென்ன?
தொடர்ச்சியாக அதிக ஜுரம் இருந்தாலும், தொடர்ச்சியாக தலைவலி அல்லது கண்களுக்கு பின்னால் வலி இருந்தாலும், மூட்டுகள் மற்றும் தசைகளில் வலி இருந்தாலும், அல்லது தலை சுற்றல் மற்றும் வாந்தி போன்ற அசௌகரியங்கள் தொடர்ச்சியாக இருந்தால், அதனை அலட்சியப்படுத்தாமல் உடனே அருகில் இருக்கும் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும்.
எப்படி நம்மை பாதுகாத்துக்கொள்வது?
வீட்டில் கொசுப் போக்கிகளை பயன்படுத்துவது ஒருபுறம் இருந்தாலும், நம் வீட்டை சுற்றி சிறிது அளவு கூட தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது தான் மிக மிக நல்லது. குழந்தைகளை மாலை நேரத்தில் வெளியே அழைத்துச் செல்லும் பொழுது, அவர்கள் உடல் குறிப்பாக கை கால்கள் ஆகியவை நன்கு மூடப்படும் அளவிற்கு முறையாக ஆடை அணிந்து அவர்களை வெளியே அழைத்துச் செல்ல வேண்டும்.
செடிகள் அதிகம் இருக்கும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லாமல் இருப்பது மிகவும் நல்லது. வயது முதிர்ந்தவர்களையும் சிறந்த முறையில் கொசுக்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும். கொசுக்களை வீட்டில் அண்டவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். தண்ணீரை நன்கு சுட வைத்து பின் குடிப்பது நல்லது.
“இயற்கையின் பேரழகு” வனப்பகுதியில் குட்டியுடன் ஹாயாக ஓய்வெடுக்கும் யானை கூட்டம்