ரெளடி பேபிக்கு ரகசிய திருமணமா? பிக்பாஸ் இயக்குனருடன் மாலையும் கழுத்துமாக நிற்கும் சாய் பல்லவி - பின்னணி என்ன?
நடிகை சாய் பல்லவிக்கும், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றுள்ளதாக கூறி சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
Sai Pallavi marriage rumours
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. தமிழ்நாட்டை சேர்ந்த சாய் பல்லவியை ஹீரோயினாக அறிமுகப்படுத்தியது மலையாள சினிமா தான். மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளிவந்த பிரேமம் படம் மூலம் அறிமுகமானார் சாய் பல்லவி. இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக இவர் நடித்த மலர் டீச்சர் கேரக்டர் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளது.
Sai Pallavi
பிரேமம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தனுஷின் மாரி 2 படம் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார் சாய் பல்லவி. இதையடுத்து சூர்யாவுக்கு ஜோடியாக என்.ஜி.கே படத்தில் நடித்த இவருக்கு தமிழ் படங்கள் பெரியளவில் கைகொடுக்காததால் டோலிவுட் பக்கம் சென்றார். அங்கு இவர் நடித்த படங்களெல்லாம் சக்கைப்போடு போட்டன. இதனால் குறுகிய காலத்திலேயே டோலிவுட்டில் டாப் நடிகையாக உயர்ந்தார் சாய் பல்லவி.
actress Sai Pallavi
கடைசியாக நடிகை சாய் பல்லவி தமிழில் நடித்த கார்கி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் நடிப்பில் தற்போது எஸ்.கே 21 திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் ரங்கூன் திரைப்படம் ஆகியவற்றை இயக்கிய இவர், தற்போது முதன்முறையாக சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.
இதையும் படியுங்கள்... எதிர்நீச்சல் சீரியல் நடிகை திடீரென மருத்துவமனையில் அனுமதி... ‘யம்மா ஏய்’ என்னம்மா ஆச்சு என பதறிப்போன ரசிகர்கள்
Sai Pallavi fan page post
இந்த நிலையில், நடிகை சாய் பல்லவியின் ஃபேன் பேஜ் ஒன்றில் அவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உடன் மாலையும் கழுத்துமாக நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு, அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும், காதலுக்கு நிறம் தடையல்ல என்பதை சாய் பல்லவி நிரூபித்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தனர். இதைப்பார்த்த ரசிகர்கள் சாய் பல்லவி ரகசிய திருமணம் செய்துகொண்டதாக கருதி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
original picture
பின்னர் தான் அது வதந்தி என தெரியவந்தது. அந்த புகைப்படம் எஸ்.கே.21 படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம். அதை தான் தற்போது தவறாக பரப்பி வருகின்றனர். சாய் பல்லவியின் ஃபேன் பேஜில் இவ்வாறு பதிவிட்டது தான் இந்த குழப்பத்திற்கு காரணமாக அமைந்தது. இதை அறிந்த நெட்டிசன்கள் தவறான செய்தி பரப்பிய அந்த ஃபேன் பேஜை முடக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... நாக சைதன்யாவுக்கு முத்தம்... சமந்தாவின் பதிவால் ஷாக் ஆன ரசிகர்கள்! விவாகரத்துக்கு பின் மீண்டும் இணைகிறார்களா?