எதிர்நீச்சல் சீரியல் நடிகை திடீரென மருத்துவமனையில் அனுமதி... ‘யம்மா ஏய்’ என்னம்மா ஆச்சு என பதறிப்போன ரசிகர்கள்
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனுக்கு அடுத்தபடியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
Ethirneechal serial
சின்னத்திரை தொடர்களில் நம்பர் 1 இடத்தில் இருப்பது எதிர்நீச்சல் சீரியல் தான். திருச்செல்வம் இயக்கிவரும் இந்த சீரியல் இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ரீச் ஆனதற்கு காரணம் அதில் ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்து தான். அவரின் நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சினிமாவில் சாதிக்க ஆசைப்பட்ட மாரிமுத்துவை இந்த சீரியல் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக திகழ்ந்து வந்த மாரிமுத்து கடந்த சில வாரங்களுக்கு முன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
Ethirneechal serial nandhini
மாரிமுத்துவின் மரணம் தமிழ் திரையுலகையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரின் மறைவுக்கு பின்னர் எதிர்நீச்சல் சீரியலில் யார் ஆதி குணசேகரனாக நடிக்கப்போகிறார்கள் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. அவரின் கேரக்டரில் அடுத்ததாக யார் நடிக்க உள்ளார் என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. இதனால் ஆதி குணசேகரன் காணாமல் போனது போல் கதையின் போக்கை மாற்றி சீரியலை தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... நாக சைதன்யாவுக்கு முத்தம்... சமந்தாவின் பதிவால் ஷாக் ஆன ரசிகர்கள்! விவாகரத்துக்கு பின் மீண்டும் இணைகிறார்களா?
serial actress Haripriya
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனுக்கு அடுத்தபடியாக மிகவும் பிரபலமான கேரக்டர் என்றால் அது நந்தினி கேரக்டர் தான். இவரும், ஆதி குணசேகரனும் எலியும் பூனையுமாக சண்டை போட்டுக்கொள்வது ரசிக்கும்படியாக இருக்கும். ஆதி குணசேகரனின் டிரேட் மார்க் டயலாக்கான யம்மா ஏய் என்கிற வசனம் நந்தினி மூலம் தான் பேமஸ் ஆனது. அவர் அடிக்கடி நந்தினியை தான் அப்படி அழைப்பார்.
Haripriya instagram post
இப்படி எதிர்நீச்சல் சீரியலில் மற்றொரு தூணாக இருந்த நந்தினி கேரக்டரில் நடித்து வந்த ஹரிபிரியாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். மருத்துவமனையில் ட்ரிப்ஸ் ஏற்றியபடி இருக்கும் புகைப்படத்தை ஹரிப்பிரியா பதிவிட்டுள்ளதை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் யம்மா ஏய் உனக்கென்னமா ஆச்சு என பதறிப்போய் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... அந்த 4 மணி நேரம்.. ரூமில் கிடைத்த மாத்திரைகள்.. விஜய் ஆண்டனியின் மகள் மீராவை பற்றி பயில்வான் கூறிய தகவல்