MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பிளே ஆஃப் சுற்று போட்டிகளில் மழை பெய்தால் போட்டி ரத்து செய்யப்படுமா? ஐபிஎல் புதிய விதி என்ன சொல்கிறது?

பிளே ஆஃப் சுற்று போட்டிகளில் மழை பெய்தால் போட்டி ரத்து செய்யப்படுமா? ஐபிஎல் புதிய விதி என்ன சொல்கிறது?

ஐபிஎல் 2024 தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நாளை தொடங்க உள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்று போட்டிகளில் மழை பெய்தால் போட்டி ரத்து செய்யப்படுவதற்கு பதிலாக கூடுதலாக 2 மணி நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ரிசர்வ் டேயும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : May 21 2024, 10:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
KKR vs SRH Qualifier 1

KKR vs SRH Qualifier 1

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிச் சுற்று போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில், வெற்றி பெறும் அணியானது நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணி 2ஆவது தகுதிச் சுற்று போட்டியில் விளையாடும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
KKR vs SRH Qualifier 1

KKR vs SRH Qualifier 1

இதையடுத்து எலிமினேட்டர் போட்டி 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 2ஆவது தகுதிச் சுற்று போட்டியில் மோதும். தோல்வி அடையும் அணி வெளியேறும். 2ஆவது தகுதிச் சுற்று போட்டி மற்றும் இறுதிப் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மட்டுமே எலிமினேட்டர் சுற்று போட்டியில் விளையாடி டிராபியை கைப்பற்றியுள்ளது.

36
KKR vs SRH Qualifier 1

KKR vs SRH Qualifier 1

ஐபிஎல் லீக் போட்டிகளில் கடந்த சில போட்டிகள் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முக்கியமான கடைசி லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்தப் போட்டி நடைபெற்று அதில் ராஜஸ்தான் வெற்றி பெற்றிருந்தால் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம் பிடித்திருக்கும். ஆனால், போட்டி மழையால் ரத்து செய்யப்படவே 3ஆவது இடம் பிடித்து எலிமினேட்டர் போட்டியில் விளையாட இருக்கிறது.

46
KKR vs SRH Qualifier 1

KKR vs SRH Qualifier 1

இந்த பிளே ஆஃப் சுற்று போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டால் போட்டி ரத்து செய்யப்படவில்லை. மாறாக, நிர்ணயிக்கப்பட்ட போட்டி நேரத்தை விட கூடுதலாக 2 மணி நேரம் அளிக்கப்படும். இது இறுதிப் போட்டிக்கும் பொருந்தும். அப்படி கூடுதலாக 2 மணி நேரம் கொடுத்தும் போட்டிகள் நடத்த முடியவில்லை என்றால் ரிசர்வ் டேயில் போட்டியை நடத்தலாம். இது ஒவ்வொரு பிளே ஆஃப் சுற்று போட்டிக்கும் பொருந்தும்.

56
KKR vs SRH Qualifier 1

KKR vs SRH Qualifier 1

ஆனால், போட்டி நாளிலும் சரி, ரிசர்வ் டேயிலும் சரி மழை பெய்தால், புள்ளிப்பட்டியலில் எந்த அணி அதிக புள்ளிகள் பெற்று முன்னிலையில் இருக்கிறதோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். ஆனால் 2 அணிகளுமே ஒரே புள்ளிகள் பெற்றிருந்தால் ரன்ரேட்டில் எந்த அணி முன்னிலையில் இருக்கிறதோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

66
KKR vs SRH Qualifier 1

KKR vs SRH Qualifier 1

கடந்த சீசன் வரையில் இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த சீசன் முதல் பிளே ஆஃப் சுற்று போட்டிக்கும் ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
அகமதாபாத்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved