புருஷன் வெளியே போன சைடு கேப்பில் கள்ளக்காதலனுடன் உல்லாசம்! நேரில் பார்த்த கணவர்! இறுதியில் நடந்த பயங்கரம்.!
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த நேரில் பார்த்த கணவர் ஆத்திரத்தில் மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பாரதிநகர் பகுதியைச் சார்ந்தவர் ராஜா (36). லாரி கார்களுக்கு பஞ்சர் பார்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவரது மனைவி ஜெயா (30). இந்நிலையில், ஜெயாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த அசர் அலி (32) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.
illegal love age
நாளடைவில் இந்த விவகாரத்தை அறிந்த கணவர் பலமுறை மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளார். இதையடுத்து நேற்று இரவு வேலை தொடர்பாக ராஜா வெளியே சென்று விட்டு வீடு திரும்பியபோது மனைவி அசர் அலியும் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ராஜா அவருடைய மனைவி ஜெயாவை தாக்கி அரிவாளால் வெட்டியுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதில் படுகாயமடைந்த ஜெயா விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அங்கிருந்து அசர் அலி தப்பி ஓடி உள்ளார் இதனையடுத்து அசர் அலியின் ஜேசிபி வாகனங்களை ராஜா தீ வைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த சாத்தூர் நகர் காவல் நிலைய போலீசார் ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க;- பெத்த தாய் செய்யுற வேலையா இது.. 2 வயது குழந்தை துடிதுடிக்க கொலை.. நாடகமாடிய கொடூர பெண்.. சிக்கியது எப்படி?