MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர்! டவுட்டே வராமல் பக்கவாக ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மனைவி! சிக்கியது எப்படி?

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர்! டவுட்டே வராமல் பக்கவாக ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மனைவி! சிக்கியது எப்படி?

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை பக்கவாக ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மனைவியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

2 Min read
vinoth kumar
Published : Jan 04 2024, 09:25 AM IST| Updated : Jan 04 2024, 09:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Chennai Crime news

Chennai Crime news

சென்னை அயனாவரம் தந்தை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார்(37). இவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சன்பிரியா(30). இவர்களுக்கு கீர்த்தனா(12) ஓவியா (7) என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் புத்தாண்டு அன்று இரவு பிரேம்குமார் அயனாவரத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் நியூ ஆவடி ரோடு நோக்கிச் சென்று கொண்டிருந்தார். 

25
Chennai Accident

Chennai Accident

அப்போது ஆர்டிஓ அலுவலகம் அருகே பின்னால் வேகமாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரேம்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

35
illegal love

illegal love

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அயனாவரத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன்  (30) என்பவரை கைது செய்தனர். இதனிடையே பிரேம்குமாரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது அக்கா சங்கீதா அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து அயனாவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் பிரேம்குமார் மனைவியிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. 

45
illegal love murder

illegal love murder

அயனாவரம் செட்டித்தெருவைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன்(30) என்பவருக்கும் பிரியாவுக்கும் இடையே பல மாதங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. நாளடைவில் இந்த விவகாரம் கணவர் பிரேம்குமாருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரியா, தனது கள்ளக்காதலன் ஹரிகிருஷ்ணனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினார். அதன்படி பிரேம்குமாரை காரை ஏற்றி கொலை செய்தது தெரியவந்தது. 

55
Wife arrested

Wife arrested

இதனையடுத்து போலீசார் விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி மனைவி பிரியா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சினிமா படப்பாணியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை மனைவி தனது கள்ளக்காதலுடன் சேர்ந்து காரை ஏற்றிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved