MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • எவ்வளவு சொல்லியும் கேட்காமல்! நைட் டைம்ல சிரிச்சு சிரிச்சு பேசிய மனைவி! கடுப்பான கணவர்! இறுதியில் பயங்கரம்!

எவ்வளவு சொல்லியும் கேட்காமல்! நைட் டைம்ல சிரிச்சு சிரிச்சு பேசிய மனைவி! கடுப்பான கணவர்! இறுதியில் பயங்கரம்!

எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இரவு நேரத்தில் வாலிபருடன் பேசி வந்த காதல் மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
| Updated : May 05 2024, 12:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ramanathapuram Crime News

Ramanathapuram Crime News

ராமநாதபுரம் தாயுமானசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (40). இவர் சரண்யா(37) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு அஜய் (16) என்ற மகனும், அக்சிதா (11) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், சரண்யா  செல்போனில் ஒரு வாலிபருடன் பேசி வந்துள்ளார். இதனை அறிந்த கணவர் பன்னீர்செல்வம் மனைவி கண்டித்துள்ளார். 

24
Cell Phone

Cell Phone

இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் நடந்த தகராறில் ஆத்திரத்தில் பன்னீர்செல்வம், சரண்யாவை அடித்துள்ளார். இதுதொடர்பாக சரண்யா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்படி போலீசார் விசாரணை நடத்தி இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். 

இதையும் படிங்க: கள்ளக்காதலியுடன் உல்லாசம்! வீடியோ எடுத்து மனைவிக்கு அனுப்பி இதுபோல சந்தோசம் கொடுக்க முடியுமா கேட்ட கணவர்!

34
Wife Murder

Wife Murder

இருப்பினும் மீண்டும் தகராறு ஏற்பட்டதால் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் இருதரப்பு உறவினர்களும் சமாதானம் செய்து வைத்துள்ளனர். ஆனால் பகல் நேரங்களில் வீட்டில் இருக்கும் சரண்யா இரவு நேரத்தில் போன் பேசுவதற்காகவே தாய் வீட்டிற்கு தூங்க சென்றுள்ளார். எவ்வளவு சொல்லியும் செல்போனில் பேசுதை மனைவி கைவிடாததால் கணவர் ஆத்திரத்தில் மாமனார் வீட்டிற்கு நைசாக சென்று சரண்யாவின் வாயைப் பொத்தி சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் சரண்யா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

44
Police investigation

Police investigation

இதனையடுத்து வீட்டிற்கு வந்த பன்னீர்செல்வம் மனைவியை கொலை செய்த கத்தியால் தன்னைத்தானே வயிற்றில் சரமாரியாக குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் அப்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சரண்யாவின் தந்தை வீட்டிற்கு சென்றனர். அப்போது அங்கு சரண்யா கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

இதையும் படிங்க:  40க்கும் 21க்கும் கள்ளத்தொடர்பு! உல்லாசத்துக்கு தந்தை இடையூறு! சத்தமே இல்லாமல் கதையை முடித்து நாடகமாடிய மகள்!

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved