IPL Best Movements: மைதான ஊழியரை கையெடுத்து கும்பிட்ட ஜஸ்ப்ரித் பும்ரா!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான 60ஆவது லீக் போட்டிக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா மைதான ஊழியரை கையெடுத்து கும்பிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Kolkata Knight Riders vs Mumbai Indians, 60th Match
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 60ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மழையின் காரணமாக 7 மணிக்கு போடப்படும் டாஸ் நிகழ்வானது 9 மணிக்கு போடப்பட்டு 9.15 மணிக்கு போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார்.
Kolkata Knight Riders vs Mumbai Indians, 60th Match
அதன்படி முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. இதில், வெங்கடேஷ் ஐயர் அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். நிதிஷ் ராணா 33 ரன்களும், ஆண்ட்ரே ரஸல் 24 ரன்கள் எடுத்தனர். பவுலிங்கைப் பொறுத்த வரையில் பும்ரா மற்றும் சாவ்லா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். கம்போஜ் மற்றும் துஷாரா தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
Kolkata Knight Riders vs Mumbai Indians, 60th Match
பின்னர் எளிய இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் இணைந்து ஓரளவு நல்ல தொடக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 6.5 ஓவர்களில் 65 ரன்கள் எடுத்தது. இதில், இஷான் கிஷான் அதிரடியாக விளையாடி 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
Kolkata Knight Riders vs Mumbai Indians, 60th Match
இவரைத் தொடர்ந்து ரோகித் சர்மா 19, சூர்யகுமார் யாதவ் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஹர்திக் பாண்டியா 2, டிம் டேவிட் 0, நேஹல் வதேரா 3 ரன்களில் நடையை கட்டினர். பின் வரிசையில் வந்த நமன் திர் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 17 ரன்கள் எடுத்தார். கடைசி வரை போராடிய திலக் வர்மா 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
Kolkata Knight Riders vs Mumbai Indians, 60th Match
இறுதியாக மும்பை இந்தியன்ஸ் 16 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக ஒரே டீமை ஹோம் மைதானத்திலும், அவே மைதானத்திலும் வீழ்த்திய முதல் அணியாக முதல் முறையாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சாதனை படைத்துள்ளது.
Kolkata Knight Riders vs Mumbai Indians, 60th Match
பவுலிங்கைப் பொறுத்த வரையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். சுனில் நரைன் ஒரு விக்கெட் எடுத்தார்.
Kolkata Knight Riders vs Mumbai Indians, 60th Match
இந்த தோல்வியின் மூலமாக மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 13 போட்டிகளில் 4 வெற்றி 9 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து முதல் அணியாக வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
Kolkata Knight Riders vs Mumbai Indians, 60th Match
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இந்த சீசனில் இதுவரையில் விளையாடிய 12 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் முதல் அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை பெற்றுள்ளது.
Kolkata Knight Riders vs Mumbai Indians, 60th Match
இந்த நிலையில் இந்தப் போட்டிக்கு முன்னதாக, மைதான ஊழியர் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவை சந்தித்து கையெடுத்து கும்பிட்டார். அதற்கு பதிலாக பும்ராவும் கையெடுத்து கும்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.