MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • எச்சரிக்கை: இந்த 5 உணவுகள் கிட்னியை சேதப்படுத்தும்.. சாப்பிடுவதை உடனே நிறுத்துங்கள்!

எச்சரிக்கை: இந்த 5 உணவுகள் கிட்னியை சேதப்படுத்தும்.. சாப்பிடுவதை உடனே நிறுத்துங்கள்!

நம் உடலில் இருக்கும் கிட்னி ஆரோக்கியமாக இருக்க சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Apr 20 2024, 12:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

நாம் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமென்றால் ஆரோக்கியத்துடன் இருப்பது மிகவும் அவசியம். அதற்கு உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உடலை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். இதயம், கல்லீரல் மற்றும் நுரையீரல்களைப் போலவே சிறுநீரகங்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

அவை உடலில் வடிகட்டிகளைப் போல செயல்படுகின்றன. மேலும் அவை உடலில் இருந்து நச்சுகளை அகற்றும். சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். ஆனால் நமது அன்றாட உணவில் சரியான புரிதல் இல்லாததாலும், தவறான பழக்கவழக்கங்களை பின்பற்றுவதாலும் சிறுநீரகங்கள் பல பிரச்சனைகளுக்கு ஆளாகின்றன. எனவே, சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

37

வாழைப்பழம்: வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. ஆனால் இதில் சோடியம் குறைவாக உள்ளதால், சிறுநீரக பிரச்சனைகளை தவிர்க்க வாழைப்பழத்தை தினசரி உணவில் சேர்க்காமல் இருப்பது நல்லது.

47

காபி-டீ: பொதுவாகவே இவற்றில் காஃபின் உள்ளது. இது உங்கள் சிறுநீரகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இது இரத்த ஓட்டம், இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகத்தில் அழுத்தத்தை அதிகரிக்கிறது. அதிகப்படியான காஃபின் சிறுநீரக கற்களை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: உங்கள் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்?

57

சோடா: சோடாவில் சர்க்கரை அதிகமாகவும், ஊட்டச்சத்து மதிப்புகள் மிகக் குறைவாகவும் உள்ளது. உங்களுக்கு தெரியுமா..ஒரு நாளைக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கார்பனேற்றப்பட்ட சோடாக்களை குடிப்பது சிறுநீரக பிரச்சனைகளை ஏற்படுத்தும். கார்பனேற்றப்பட்ட மற்றும் ஆற்றல் பானங்கள் இரண்டும் சிறுநீரக கற்கள் அபாயத்தை அதிகரிக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: பெண்களுக்கு சிறுநீரக பாதிப்பு.. உடலில் காட்டும் 7 அறிகுறிகள் இதோ!!

67

உப்பு: உப்பில் சோடியம் அதிகம் உள்ளதால், அது இரத்த அழுத்தை அதிகரிக்கும். மேலும் இது சிறுநீரகத்தின் மீது அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. சூப்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பிஸ்ஸா, கெட்ச்அப், சாஸ் மற்றும் ஊறுகாய் ஆகியவற்றில் உப்பு அதிகமாகவே உள்ளதால், சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் இவற்றை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

 

77

உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கில் செய்யப்பட்ட சிப்ஸ், பிரெஞ்ச் ஃப்ரைஸ் போன்ற பேக் செய்யப்பட்ட உணவுகளை உண்ணும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், உடனே அதை நிறுத்துங்கள். அவை உங்கள் சிறுநீரகத்திற்கு நல்லதல்ல. காரணம் வறுத்த உணவுகள் சிறுநீரகத்திற்கு கேடு விளைவிக்கும். மேலும், ஏற்கனவே சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் உருளைக்கிழங்கு சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் பொட்டாசியம் அதிகமாகவே உள்ளது. இது சிறுநீரகத்திற்கு நல்லதல்ல.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved