Harish Kalyan: முதல் திருமண நாளை படு ரொமான்டிக்காக கொண்டாடிய ஹரிஷ் கல்யாண்! புகைப்படங்களுக்கு குவியும் லைக்ஸ்!
நடிகர் ஹரிஷ் கல்யாண் இன்று தன்னுடைய முதலாம் ஆண்டு, திருமண நாளை கொண்டாடி வரும் நிலையில், இவர்களின் லேட்டஸ்ட் ரொமான்டிக் போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
தமிழில், சிந்து சமவெளி என்னும் படத்தின் மூலம் அறிமுகமாகி... பின்னர் அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தா மாமா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிபலமானார் ஹரிஷ் கல்யாண். தமிழ் மட்டும் இன்றி சில தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
ஆரம்பத்தில் பட வாய்ப்புகள் சரியாக அமையாமல் இருந்த இவர், அதிரடியாக கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வயல்கார்டு போட்டியாளராக என்ட்ரி ஆனார்.
Bigg Boss Promo: வீடியோ போட்டு விஷ்ணுவை ரோஸ்ட் பண்ண போறாரு கமல்! வெளியான பரபரப்பு புரோமோ!
வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் 2 வது நாளில் உள்நுழைந்த இவர் 98 நாட்கள் தாக்கு பிடித்து இரண்டாவது ரன்னர்-ரப்பாக தேர்வு செய்யப்பட்டார். பிக்பாஸ் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட ஹரிஷ் கல்யாண், மிகவும் நேர்த்தியான காதல் கதைகளை தேர்வு செய்து நடித்து, தற்போது இளம் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் நடித்து வெளியான 'பியர் பிரேமா காதல்', தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு, கசடதபற , ஓ மண பெண்ணே, இன்ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' 'LGM' போன்ற படங்கள் ஹரிஷ் கல்யாணுக்கு தனி ரசிகர்கள் கூட்டத்தையும் உருவாக்கி கொடுத்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கும், நர்மதா என்கிற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28-ஆம் தேதி மிக பிரமாண்டமாக திருமணம் நடந்தது.
ஏற்கனவே காதலில் தோல்வியடைந்த ஹரிஷ் கல்யாண், பெற்றோர் பார்த்த பெண்ணையே... காதலித்து திருமணம் செய்து கொண்டு, மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் இன்று, தங்களின் முதலாம் ஆண்டு திருமண நாளை மிகவும் சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில்... ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த சில போட்டோஸும் வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது. ஹரிஷ் கல்யாண் தற்போது 100 கோடி வானவில், நட்சத்திரம், டீசல், ரப்பர் பந்து உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். விரைவில் ஒவ்வொரு படங்களாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.