Bigg Boss Promo: வீடியோ போட்டு விஷ்ணுவை ரோஸ்ட் பண்ண போறாரு கமல்! வெளியான பரபரப்பு புரோமோ!
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், செய்யாத குற்றத்திற்காக அக்ஷயா விஷ்ணுவால் தண்டிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆதரவாக கமல் தற்போது குறும்படம் போடுவது குறித்த புரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்க வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் தீயாக பரவி வரும் நிலையில், மற்றொரு புறம், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுக்கவுள்ள அந்த 5 வயல் கார்டு போட்டியாளர்கள் யாராக இருப்பார்கள் என்பதும், சமூக வலைத்தளத்தில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இன்றைய முதல் புரோமோவில், மக்கள் தான் வெற்றியாளரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை போட்டியாளர்கள் மறந்து விட்டு, பணம் உனக்கு, பட்டம் எனக்கு என மாயா பேசியதை சுட்டி காட்டிய கமல், இது பற்றி அவர்களுக்கு நினைவு படுத்த வேண்டாமா என கூறி இருந்தார். கமல்ஹாசன் முதல் புரோமோவில் பேசியதை பார்த்தே, நெட்டிசன்கள் இன்னைக்கு செம்ம சம்பவம் இருக்கு என அந்த வீடியோவை வைரலாக்கி வந்த நிலையில், சற்று முன்னர் இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.
இந்த வாரம், விஷ்ணு யார் தப்பு செய்தார்கள் என்பதை கூட... கேட்டு தெரிந்து கொள்ளாமல் தான் கீழே விழுந்ததற்கு சக பெண் போட்டியாளரான அக்ஷயா தான் காரணம் என அவரை திட்டி சண்டை போட்டார். அக்ஷயாவும் பல முறை, நான் உங்களை தள்ளிவிடவில்லை என கூறினார். ஆனால் விஷ்ணு ஓவராக சீன் போட்டு அவரை அடிக்க பாய்ந்தது, பிக்பாஸ் ரசிகர்களையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் இன்றைய இரண்டாவது புரோமோவில் இதுகுறித்து விசாரிக்கும் காட்சி தான் ஒளிபரப்பாகியுள்ளது. அக்ஷயா விஷ்ணுவை தள்ளிவிடவில்லை என்பதில் உறுதியாக இருந்தாலும், விஷ்ணு சத்தியம் செய்ய சொன்னபோது அவர் அதற்க்கு மறுத்துவிட்டார். ஏன் சத்தியம் செய்யவில்லை என, அவரிடம் கேள்வி எழுப்பும் கமல், மற்றவரின் காலில் இடறி கூட நீங்கள் விழுந்திருக்கலாம் என சூசகமாக கூறி குறும்படம் போடுகிறார்.
இதை கேட்டு கமல்ஹாசன் முன் அரங்கத்தில் அமர்ந்திருந்த பிக்பாஸ் ரசிகர்களும் கை தட்டி ஆரவாரம் செய்கின்றனர். உண்மையில் ஐஷுவின் கால் பட்டு தான் விஷ்ணு கீழே விழுந்திருப்பார். இது தெரியாமல் ஓவராக ஆடிய விஷ்ணுவை கண்டிப்பாக இன்று குறும்படம் போட்டு கமல் ரோஸ்ட் பண்ணுவது உறுதி.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D