Baakiyalakshmi Update: கோபியை வீட்டுக்கு அழைத்துவர முடிவெடுத்த ராஜேஸ்வரி! பாக்கியா எடுத்த விபரீத முடிவு!
மீண்டும் கோபியை, தன்னுடைய வீட்டிற்கு ராஜேஸ்வரி அழைத்து வர முயற்சி எடுக்கும் நிலையில், இதற்க்கு எதிராக பாக்கியா விபரீத முடிவை எடுக்க உள்ளது பற்றிய புரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பாக்கிய லட்சுமி சீரியல் தொடர்ந்து டாப் 10 TRP பட்டியலில் இடம்பிடித்து வருகிறது. பாக்கியாவை விருப்பம் இல்லாமல் பெற்றோர் திருமணம் செய்து வைத்ததற்காக, மூன்று பிள்ளைகள் பிறந்த பிறகும் மனைவி பாக்கியாவை ஒரு வேலைக்காரி போல் நடத்தி வந்தார் கோபி. இதை தொடர்ந்து, தன்னுடைய பழைய காதலியான ராதிகாவை பல தில்லுமுல்லு வேலைகள் செய்து திருமணம் செய்து கொண்டார்.
baakiyalakshmi
பாக்கிய லட்சுமியுடன் கோபி வாழும் போது, எந்த வித டென்ஷானும் இல்லாமல். சந்தோஷமாக வாழ்ந்தார். வீட்டு செலவுக்கு ரூபாய் 10,000 கொடுத்துவிட்டு, பலமுறை அதை சொல்லியும் காட்டுவார். பாக்கியாவை பார்த்து, "ஏய் முட்டாள் நீ சம்பாதிச்சா உனக்கு காசோட அருமை தெரியும்" என இவர் கூறியது பலமுறை ரசிகர்களையே கடுப்பாக்கியுள்ளது.
baakiyalakshmi
கோபி பாக்கியாவை விட்டு பிரிந்த பின்னர், பாக்கியா சுதந்திர பறவையாக மாறியது மட்டும் இன்றி, தொழில் ரீதியாகவும், காலேஜ், ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாஸ் என கலக்கி கொண்டிருக்கிறார்.
baakiyalakshmi
ஆனால் கோபி, கடன் மேல் கடன் வாங்கி... அதனை எப்படி அடைப்பது என தெரியாமல் புலம்பி வருகிறார். ஒரு பக்கம், கடன் தொல்லைக்காக அடுத்தடுத்த பேங்கில் இருந்து கிரெடிட் கார்டு விஷயம் தொடர்பாக போன் கால் வர, ராதிகா தன்னுடைய அம்மாவின் பிறந்த நாளுக்கு 4 பவுன் தங்க செயின் வாங்கி தரவேண்டும் என கூற, பெட்ரோலுக்கு கூட காசு இல்லமல் இருக்கும் கோபிக்கு இது அதிக ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தியது.
baakiyalakshmi
ராதிகா கூறிய செயின் விஷயத்தை நினைத்து கொண்டிருந்த கோபி, மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, தன்னை பார்க்க வந்த அம்மாவிடம்... தன்னுடைய கஷ்டத்தை புலம்பி கொட்டுகிறார். மருத்துவரும், ராஜேஸ்வரியை பயமுறுத்துவது போல், இதுபோல் கோபி டென்க்ஷன் ஆனால் அவருக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்.
எனவே தன்னுடைய மகன் கோபியை வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்பதில் ராஜேஸ்வரி விடாப்பிடியாக இருக்கிறார். இதற்க்கு இனியா மட்டுமே எதுவுமே சொல்லாத நிலையில், எழில், செழியன் ஆகியோர் கோபி வீட்டுக்கு வருவது சரியாக இருக்காது என தெரிவிக்கின்றனர். ஆனால் ராஜேஸ்வரி தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பதால், பாக்கியா, "சரி அத்தை நீங்க உங்க பிள்ளையை வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க, ஆனால் அவர் இந்த வீட்டுக்குள் கால் எடுத்து வைத்தால், நான் இங்க இருக்க மாட்டேன் என தன்னுடைய விபரீத முடிவை தெரிவிக்கிறார்".
Vanitha Son in Leo: 'லியோ' படத்தில் பிக்பாஸ் வனிதாவின் மகன்..! இதை நோட் பண்ணுனீங்களா?
Baakiyalakshmi
எனவே ராஜேஸ்வரி அடுத்து என்ன முடிவு செய்வார் என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில், மற்றொரு புறம், ராதிகாவை ஏத்தி விடுவது போல் அவரின் அம்மா வந்து, மாப்பிள்ளையை அவங்க கூட்டிட்டு போய்டுவாங்க போல இருக்கு.. அப்படி விட கூடாது என கூறுகிறார். ராதிகாவை மீறி கோபி பாக்கியா வீட்டுக்கு செல்வாரா? அப்படியே சென்றாலும் பாக்கியா அதை ஏற்றுக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D