MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பில்டிங் ஸ்டிராங், பேஸ்மெண்ட் வீக்: ஒரேயடியாக சரண்டரான MI – 18 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் வெற்றி!

பில்டிங் ஸ்டிராங், பேஸ்மெண்ட் வீக்: ஒரேயடியாக சரண்டரான MI – 18 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் வெற்றி!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 60ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியானது 16 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
| Updated : May 12 2024, 03:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
IPL 2024 KKR vs MI

IPL 2024 KKR vs MI

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 60ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மழையின் காரணமாக 7 மணிக்கு போடப்படும் டாஸ் நிகழ்வானது 9 மணிக்கு போடப்பட்டு 9.15 மணிக்கு போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
Kolkata Knight Riders vs Mumbai Indians, 60th Match

Kolkata Knight Riders vs Mumbai Indians, 60th Match

அதன்படி முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. இதில், வெங்கடேஷ் ஐயர் அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். நிதிஷ் ராணா 33 ரன்களும், ஆண்ட்ரே ரஸல் 24 ரன்கள் எடுத்தனர். பவுலிங்கைப் பொறுத்த வரையில் பும்ரா மற்றும் சாவ்லா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். கம்போஜ் மற்றும் துஷாரா தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

39
IPL 2024 KKR vs MI

IPL 2024 KKR vs MI

பின்னர் எளிய இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் இணைந்து ஓரளவு நல்ல தொடக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 6.5 ஓவர்களில் 65 ரன்கள் எடுத்தது. இதில், இஷான் கிஷான் அதிரடியாக விளையாடி 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

49
Kolkata Knight Riders vs Mumbai Indians, 60th Match

Kolkata Knight Riders vs Mumbai Indians, 60th Match

இவரைத் தொடர்ந்து ரோகித் சர்மா 19, சூர்யகுமார் யாதவ் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஹர்திக் பாண்டியா 2, டிம் டேவிட் 0, நேஹல் வதேரா 3 ரன்களில் நடையை கட்டினர். பின் வரிசையில் வந்த நமன் திர் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 17 ரன்கள் எடுத்தார். கடைசி வரை போராடிய திலக் வர்மா 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

59
IPL 2024 KKR vs MI

IPL 2024 KKR vs MI

இறுதியாக மும்பை இந்தியன்ஸ் 16 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். சுனில் நரைன் ஒரு விக்கெட் எடுத்தார்.

69
Kolkata Knight Riders vs Mumbai Indians, 60th Match

Kolkata Knight Riders vs Mumbai Indians, 60th Match

இந்த தோல்வியின் மூலமாக மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 13 போட்டிகளில் 4 வெற்றி 9 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து முதல் அணியாக வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

79
IPL 2024 KKR vs MI

IPL 2024 KKR vs MI

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இந்த சீசனில் இதுவரையில் விளையாடிய 12 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் முதல் அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை பெற்றுள்ளது.

89
Kolkata Knight Riders vs Mumbai Indians, 60th Match

Kolkata Knight Riders vs Mumbai Indians, 60th Match

கடந்த ஆண்டு நடைபெற்ற 16 ஆவது சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது விளையாடிய 14 போட்டிகளில் 6 வெற்றி, 8 தோல்விகளுடன் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து 7ஆவது இடம் பிடித்தது.

99
IPL 2024 KKR vs MI

IPL 2024 KKR vs MI

இதே போன்று 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் கேகேஆர் விளையாடிய 14 போட்டிகளில் 6 வெற்றி, 8 தோல்விகளுடன் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து 7ஆவது இடம் பிடித்தது. ஆனால், நடப்பு ஆண்டுக்கான 17ஆவது சீசனில் 18 புள்ளிகளுடன் முதல் அணியாக பிளே ஆஃப் வாய்ப்பு பெற்றுள்ளது. எஞ்சிய 2 போட்டிகள் முறையே குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை எதிர்கொள்கிறது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஹர்திக் பாண்டியா
கனமழை
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
மும்பை இந்தியன்ஸ்
ரோகித் சர்மா
விளையாட்டு
சுனில் நரைன்
செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved