MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • வெள்ளத்தில் மிதக்கும் வீடு... யாரும் உதவ வரல; நிலைமை மோசமா இருக்கு! உதவிக்காக காத்திருக்கும் விஷ்ணு விஷால்

வெள்ளத்தில் மிதக்கும் வீடு... யாரும் உதவ வரல; நிலைமை மோசமா இருக்கு! உதவிக்காக காத்திருக்கும் விஷ்ணு விஷால்

தனது வீட்டுக்குள் வெள்ளநீர் புகுந்ததோடு, நீரின் அளவுக்கு படிப்படியாக அதிகரித்து வருவதாக நடிகர் விஷ்ணு விஷால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

2 Min read
Ganesh A
Published : Dec 05 2023, 01:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
vishnu vishal

vishnu vishal

சென்னையில் மிக்ஜாம் புயலால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன. இன்று மழை ஓய்ந்துள்ளதால் மீட்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் வசித்து வரும் சினிமா பிரபலங்களும் இந்த பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று நடிகர் விஷால், தன் வீட்டில் தண்ணீர் புகுந்ததை அடுத்து மாநகராட்சி மேயரையும், அதிகாரிகளையும் விமர்சித்து வீடியோ வெளியிட்டு இருந்தார்.

24
vishnu vishal house

vishnu vishal house

அதேபோல் நடிகர் ரோபோ சங்கரும் தன் வீட்டின் முன் தேங்கிய வெள்ளநீரை வீடியோ எடுத்து பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில், தற்போது நடிகர் விஷ்ணு விஷாலும் தன் வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்துவிட்டதாகவும், தங்களுக்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லை எனக்கூறி எக்ஸ் தளத்தில் தன் ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார். அவரின் பதிவை பார்த்த ரசிகர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
vishnu vishal X post

vishnu vishal X post

அந்த பதிவில், காரப்பாக்கத்தில் உள்ள என் வீட்டுக்குள் தண்ணீர் வந்துவிட்டது. அதன் அளவும் போகப்போக மோசமாக உயர்ந்து வருகிறது. உதவி கேட்டு அழைத்திருக்கிறேன். இங்கு கரண்ட் இல்ல, வைஃபை இல்ல, போன் சிக்னல் இல்ல, எதுவுமே இல்ல. என் வீட்டு மொட்டை மாடியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே சிக்னல் கிடைக்கிறது. எனக்கும் இங்கு இருப்பவர்களுக்கும் உதவி கிடைக்கும் என நம்புகிறேன். சென்னை மக்களை நினைத்தால் வருத்தமாக உள்ளது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.

44
Flood in vishnu vishal house

Flood in vishnu vishal house

அதோடு தன் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்தபடி எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார் விஷ்ணு விஷால். அந்த புகைப்படத்தில் அவர் வீட்டை சுற்றியும் தண்ணீர் சூழ்ந்து உள்ளதை பார்த்த நெட்டிசன்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி வருவதோடு, நிச்சயம் உதவி கிடைக்கும் என ஆறுதலும் கூறி வருகின்றனர். நடிகர் விஷ்ணு விஷால் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... தீபாவளி ரேஸில் தோற்றதால்... ஓடிடியில் ஜிகர்தண்டாவுடன் போட்டி போடாமல் சோலோவாக ரிலீஸ் ஆகும் ஜப்பான்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை
விஷ்ணு விஷால்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved