மணி என்னை பிரேக்-கப் பண்ண காரணம் அவர் தான்! முதல் முறையாக உண்மையை உடைத்த முன்னாள் காதலி பெலினா!
பிக்பாஸ் நிகழ்ச்சியில், ரவீனாவுக்கு காதல் ரூட்டு போட்டுக் கொண்டிருக்கும் மணியின், முன்னாள் காதலி பெலினா ஏன் மணி உடன் பிரேக்கப் ஆனது என்பதை பற்றி, முதல் முறையாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர்கள் மணி - பெலினா ஜோடி. ஒவ்வொரு டான்ஸிலும் இவர்களின், கெமிஸ்ட்ரி வேற லெவலுக்கு ரசிக்கப்பட்ட நிலையில், பின்னர் இருவருமே உண்மையாகவே காதலிக்க துவங்கினர்.
நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களின் காதல் வாழ்க்கை, ரவீனா வருகைக்கு பின்னர் கொலம்பஸ் ஆனது. ரவீனாவுடன் பழக துவங்கிய பின்னர், மணி பெலினாவிடம் பேசுவதை குறைத்து கொண்டு, ரவீனாவுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதுவே இவர்கள் இருவருக்குள்ளும் பிரச்சனை வர காரணமாக அமைந்துள்ளது.
ஒரு கட்டத்தில் மனம் உடைந்த பெலினா "உன் கேரியரை நீ பாரு... என்னுடைய கேரியரை நான் பார்க்கிறேன் என சொல்லி மணியை பிரேக் அப் செய்துள்ளார். ஏற்கனவே ரவீனாவுடன் செம்ம க்ளோஸாக பழகி வந்த மணி, ப்ரேக்கப்புக்கு பின்னர், வெளிநாடுகளுக்கெல்லாம் ரவீனாவுடன் சென்று, டான்ஸ் ஆடி ரீல்ஸ் செய்து வெளியிட்டிருந்தார்.
மணி - ரவீனா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த போதே இருவரும் காதலர்கள் என்கிற பேச்சு அடிபட்ட நிலையில், ரவீனா அதனை மறுத்து வந்தார். விசித்ரா, பிரதீப் போன்ற சிலர் நேரடியாகவே இதனை மணி - ரவீனாவிடம் கேட்ட போது கூட, நீங்களே பேசி காதலிக்க வச்சிடுவீங்க போல என நக்கலாக பதிலளித்தார் மணி. அதே போல், பிரதீப் கிண்டல் செய்தபோது அதெல்லாம் இல்லை என சாதித்தார் மணி.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஆனால் ஐஷு நீண்ட நாள் தோழி என்பதால், அவரிடம் மட்டும் ரவீனாவுடன் தனக்கு உள்ளது காதல் தான் என்பதை ஓப்பன் செய்தார். மேலும் இவர்களின் அட்ராசிட்டியும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. இவர்களின் காதல் விஷயம் பார்க்க ரசிகர்களுக்கு செம்ம என்டர்டெயின்மெண்டாக இருக்கும் நிலையில், பின்னால் என்னென்ன விளைவுகள் ஏற்படுத்தும் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.