Leo Hits 500 Crores: 6 நாட்களில் 500 கோடியை தாண்டிய லியோ வசூல்! ஆல் ஏரியாவிலும் கெத்து காட்டும் தளபதி..!
தளபதி விஜய் நடிப்பில் வெளியான, 'லியோ' திரைப்படம் 6 நாட்களில் 500 கோடி வசூலை கடந்து விட்டதாக வெளியாகியுள்ள தகவலை தளபதி ரசிகர்கள் தாறுமாறாக சமூக வலைத்தளத்தில், வைரலாக்கி வருகிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் சுமார் 300 கோடி பட்ஜட்டில் உருவான லியோ அக்டோபர் 19-ஆம் தேதி, வெளியானது. விஜய் ரசிகர்களின், ஏகோபித்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம், வெளியானது முதலே கலவையான விமர்சனங்களையே பெற்றாலும், வெளியான முதல் நாளே ரூ.148 கோடி வசூலித்து ரசிகர்களை பிரமிக்க வைத்தது.
அதுமட்டுமின்றி கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் அதிக வசூல் குவித்த தமிழ் படங்களின் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது லியோ. இப்படம் அம்மாநிலத்தில் மட்டும் ஆறு நாட்களில் ரூ.45 கோடி வசூலித்து உள்ளதாக கூறப்பட்டது. இதே நிலை நீடித்தால், ஜெயிலர் பட சாதனையை லியோ முறியடிக்கும் என ஆர்ப்பரித்த கூறி வருகிறார்கள் தளபதி ரசிகர்கள்.
இப்படம் வெளியாகி, 6 நாட்கள் ஆகும் நிலையில்... பல திரையரங்குகள் வெறிச்சோடி காணப்படுவதாகவும், இப்படத்தின் வசூல் குறைந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும் 6 நாட்களில் 450 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், சற்று முன்னர் 'லியோ' படம் 500 கோடியை கடந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதன் மூலம் 6 நாட்களில் 500 கோடியை கடந்த படங்களின் லிஸ்டில் 'லியோ' இணைந்துள்ளது. குறிப்பாக அதிவேகமாக 500 கோடியை அள்ளிய திரைப்படம் என்கிற சிறப்பும் லியோவுக்கு கிடைத்துள்ளது. மேலும் பொன்னியின் செல்வன், விக்ரம், பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்களின் வசூல் சாதனையை ஒரு வாரத்திலேயே லியோ முறியடித்துள்ளது. 611 கோடி வசூலித்த ஜெயிலர் சாதனையை இப்படம் முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.