தண்ணீருக்கு நடுவே... தவழும் வெள்ளை தாமரை போல் நிற்கும் மாளவிகா மோகனன்! அங்கத்தின் அழகை காட்டும் கவர்ச்சி போஸ்!
'தங்கலான்' பட நடிகை மாளவிகா மோகனன்... கவர்ச்சி உடையில் தண்ணீருக்கு நடுவே நின்றபடி எடுத்து கொண்ட லேட்டஸ்ட் போட்டோஸ் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
Malavika Mohanan
கேரளத்து பைங்கிளியான மாளவிகா மோகன், மும்பையில் உள்ள வில்சன் கல்லூரியில் மாஸ் மீடியா படிப்பை முடித்ததும் நடிப்பு துறையை தேர்வு செய்து, நடிகையாக முடிவு செய்தார். இவரின் தந்தை கே.யு.மோகனன் ஒரு ஒளிப்பதிவாளர் என்பதால், தன்னுடைய மகளின் ஆசைக்கு சப்போர்ட் செய்தார்.
Malavika Mohanan
இதை தொடர்ந்து 'பட்டம் கம்பம்' என்கிற மலையாள படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு மாளவிகா மோகனுக்கு கிடைத்தது. இதைத்தொடர்ந்து கன்னடம், மற்றும் ஹிந்தி மொழிகளிலும் நடிக்க துவங்கினார். மற்ற மொழிகளில் ஹீரோயினாக இவர் என்ட்ரி கொடுத்திருந்தாலும், தமிழில் குணச்சித்திர நடிகையாக அறிமுகமாகும் வாய்ப்பு தான் இவருக்கு கிடைத்தது.
Malavika Mohanan
அதன்படி கடந்த 2019-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த, 'பேட்ட' படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடி போட்டதன் மூலம், இவரின் புகழ் பட்டி தொட்டி எங்கும் பரவியது.
Malavika Mohanan
தொடர்ந்து தரமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டும் மாளவிகா மோகனன், தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், நடிப்பில் தங்கம் எடுக்கும் தொழிலாளர்கள் பற்றி எடுக்கப்பட்டுள்ள 'தங்கலான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் ரிலீசாக உள்ளது.
Malavika Mohanan
இதை தொடர்ந்து, யுத்தரா என்கிற ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார். தென்னிந்திய படங்களை விட, ஹிந்தி படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டும் மாளவிகா மோகனன்... அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் செய்து அதனை வெளியிட்டு வருகிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Malavika Mohanan
அந்த வகையில் தற்போது வெள்ளை நிற தாமரை... தண்ணீரில் தவழ்ந்து கொண்டிருப்பது போல், கவர்ச்சிக்கு குறை வைக்காமல் இவர் எடுத்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.