'எதிர்நீச்சல்' சீரியல் மாரிமுத்துவுக்கு கோவில் கட்டி.. சிலை வைத்து வழிபடும் பாஜகவினர்! வைரலாகும் புகைப்படங்கள்
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த, பாஜகவினர், சிலர் மறைந்த நடிகர் மாரிமுத்து மற்றும் பிரதமரின் தாயார் ஹீராபென் ஆகியோருக்கு கோவில் கட்டி அதில் அவர்களின் சிலை வைத்து வழிபட்டுள்ளனர். இதுகுறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.
'எதிர்நீச்சல்' சீரியல் என்று சொன்னதுமே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது, குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த 'மாரி முத்து' தான். எதிர்மறையான கதாபாத்திரமாக இருந்தாலும், ரசிகர்கள் தன்னை நேசிக்கும் அளவுக்கு நேர்த்தியாக நடித்தவர். குறிப்பாக இந்த சீரியலில் இவர் அடிக்கடி கூறும் "இந்தம்மா ஏய் என்ற வார்த்தை செம்ம ஃபேமஸ். இந்த வார்த்தையை வைத்து பல மீம்ஸுகளும் வெளியாகி உள்ளது.
மாரிமுத்து தன்னுடைய சொந்த ஊரான, தேனி மாவட்டம் பசுமலை பகுதியில் இருந்து சினிமா மீது உள்ள ஆர்வத்தால் ஓடி வந்து, டீ கடையில் வேலை செய்து கொண்டு சினிமா வாய்ப்புகளை தேட துவங்கினார். எப்படியோ பாடலாசிரியர் வைரமுத்து விடம் உதவியாளராக பணியாற்ற கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்டு, அடுத்தடுத்து ராஜ்கிரண், வசந்த், எஸ்.ஜே.சூர்யா போன்ற இயக்குனர்களிடம் துணை இயக்குனராக பணியாற்றினார்.
பின்னர் கண்ணும் கண்ணும் படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இப்படம் தோல்வியை தழுவிய நிலையில், அடுத்ததாக 'புலிவால்' என்கிற படத்தையும் இயக்கினார். துரதிஷ்டவசமாக இந்த படமும் தோல்வியடைந்தது. இதை தொடர்ந்து, மிஷ்கின் இயக்கிய 'யுத்தம் செய்' படத்தில் குணச்சித்திர நடிகராக அறிமுகமாகி, பின்னர் அடுத்தடுத்து சில நல்ல ரோல்களை தேர்வு செய்து நடித்தார்.
ஆனால் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைய செய்தது 'எதிர்நீச்சல்' சீரியல் தான். இந்த சீரியல் மூலம் ரஜினியின் ஜெயிலர், கமல்ஹாசனின் இந்தியன் 2, சூர்யாவுடன் கங்குவா போன்ற படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தன்னுடைய கேரியரில் உயர்வை சந்தித்து வந்த மாரிமுத்து, கடந்த 2 மாதத்திற்கு முன்னர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த, பாஜகவினர் சீரியல் நடிகர் மாரிமுத்து மற்றும் மோடியின் தாயார் ஹீராபென் ஆகியோருக்கு கோவில் கட்டி, இவர்கள் இருவரின் சிலையை அருகருகே வைத்து செய்துள்ளனர். இதுகுறித்த வீடியோஸ் மற்றும் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.