திண்டுக்கல் மாவட்டம் தான் இதில் டாப்; அரசு நடவடிக்கை எடுத்தும் குறையாத இளம்பெண் கர்ப்பம்;ஆர்டிஐ-யில் அதிர்ச்சி
தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 3 வருடங்களில் மட்டும் 36ஆயிரம் இளம்பெண்கள் கர்ப்பம் தரித்துள்ளது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
குழந்தை திருமணமும், இளம் வயது கர்ப்பமும்
தமிழகத்தில் குழந்தை திருமணம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் அதனை தடுக்க தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகள் வருகிறது. குறிப்பாக சமூக நல ஆணையரகம் சார்பாக குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது. இருந்த போதும் பல இடங்களில் திரைமறைவில் திருமணங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சமூக ஆர்வலர் பிரபாகரன் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை எத்தனை குழந்தை திருமணங்கள் நடைபெற்றது என்றும் அதனை எத்தனை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது என்பது தொடர்பாகவும் கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் 18 வயதிற்கு கீழ் உள்ள எத்தனை பெண்கள் கர்ப்பம் அடைந்துள்ளனர் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு சமூக நல ஆணையரகம் பதில் அனுப்பி உள்ளது அந்த பதிலில்,
தமிழகத்தில் தொடரும் குழந்தை திருமணம்
2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை சுமார் 2638 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், இதில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 238 குழந்தை திருமணங்கள் நடைபெற இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக தேனியில் 218 குழந்தை திருமணங்கள் நடைபெற இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 2021 ஆம் ஆண்டில் மட்டும் குழந்தை திருமணம் தொடர்பாக 707 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல 2022 ஆம் ஆண்டு தமிழக முழுவதும் 2401 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் 881 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தல்
இதில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டுமே 205 குழந்தை திருமணங்கள் நடைபெற இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு 1961 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகும், அதில் 973 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்ப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தேனியில் 128 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டான 2024 ஆம் ஆண்டில் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டும் 347 குழந்தை திருமணங்கள் நடைபெற்ற இருந்த நிலையில் தடுக்கப்பட்டதாகவும், இந்த திருமணங்கள் தொடர்பாக 128 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 வயதிற்கு கீழ் உள்ள பெண்கள் கர்ப்பம்
இதே போல 18 வயதிற்கு கீழ் கர்ப்பமான பட்டியலும் வெளியாகியுள்ளது. அதில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை 14ஆயிரத்து31 இளம்பெண்களும், 2022 ஆம் ஆண்டு 10ஆயிரத்து 901 பேரும் 2023 ஆம் ஆண்டு 9ஆயிரத்து 565 பெரும் தற்போது நடப்பு உண்டான 2024 ஆம் ஆண்டில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் மட்டும் 1, 637 பேரும் கர்ப்பம் அடைந்துள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சமூக நல ஆணையம் தெரிவித்துள்ளது. ஒட்டு மொத்தமாக கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 36ஆயிரத்து 134 இளம்பெண்கள் கர்ப்பம் தரித்துள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பூரில் அதிகரிக்கும் விபச்சாரம்.. ரெய்டு விட்ட போலீஸ்.. கையும் களவுமாக சிக்கிய அழகிகள்..