MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஈசியான முறையில் பூண்டு தோல் உரிக்க..5 நிமிடத்தில் தோசை கல்லை சுத்தம் செய்ய.. பயனுள்ள வீட்டுக் குறிப்புகள் இதோ!

ஈசியான முறையில் பூண்டு தோல் உரிக்க..5 நிமிடத்தில் தோசை கல்லை சுத்தம் செய்ய.. பயனுள்ள வீட்டுக் குறிப்புகள் இதோ!

ஈஸியான முறையில் பூண்டு தோலை உரிக்கவும், எண்ணெய் பிசுபிசுப்பாக இருக்கும் தோசை கல்லை சுத்தம் செய்யவும், பயனுள்ள சில வீட்டு குறிப்புகள் இங்கே

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Jun 20 2024, 11:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை இல்லத்தரசிகள் வேலை செய்து கொண்டே இருப்பார்கள். அந்த வகையில், அவர்களின் வேலையை எளிதாகுவதற்காக சில குறிப்புகள் நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.

24

காலையில் அவசர அவசரமாக உணவு சமைக்கும் இல்லத்தரசிகளுக்கு பூண்டு தோல் இருப்பது சிரமமாக இருக்கும். சிலருக்கு பூண்டு தோல் உரித்தால் நகம் வலிக்கும். இதனால் அவர்கள் கத்தியை பயன்படுத்துவார்கள். ஆனால், அப்படி பயன்படுத்தும் போது நீண்ட நேரம் எடுக்கும். எனவே, பூண்டு பற்களை ஒரு சில்வர் பாக்ஸில் போட்டு மூடி வைத்து, ஒரு நிமிடத்திற்கு நன்றாக குலுக்கிக் கொள்ளுங்கள். திறந்து பார்த்தால் சில பூண்டு பற்கள் முழுவதுமாக தோலுரிந்து இருக்கும். சில பற்களின் தோல் பாதியளவு நீங்கியிருக்கும். எனவே, இதை எளிதில் எடுத்து விடலாம்.

இதையும் படிங்க: Kitchen Tips : வருடம் ஆனாலும் அரிசி, பருப்பில் வண்டு வராது.. ஸ்டோர் பண்ண சூப்பர் டிப்ஸ்!

 

34

பலரது வீட்டு தோசை கல் அல்லது நான் ஸ்டிக் தவா எண்ணெய் பிசுபிசுப்பாக இருக்கும் மற்றும் முட்டை வாடையும் அடிக்கும். உங்க வீட்டிலும் அப்படி இருக்குதா..? இதை எளிதில் சுத்தம் செய்ய முதலில் நீங்கள் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டை ஒரு ஸ்பான்ச் உதவியுடன், தோசைக்கல்லில் எல்லா இடங்களிலும் படும்படி தடவவும். பிறகு, தண்ணீரில் கழுவி பார்த்தால் தோசை கல்லில் எண்ணை பிசுபிசுப்பு முற்றிலுமாக நீங்கி இருக்கும் மற்றும் முட்டை வாடையும் அடிக்காது.

இதையும் படிங்க: இனி பாத்திரம் கழுவ சோப் வாங்கி பணத்தை வீணாக்காதீங்க! 'இத' ட்ரை பண்ணுங்க!

44

பலர், சிங்கில் பாத்திரங்களை சுத்தம் செய்வார்களே தவிர, சிங்கை அடிக்கடி சுத்தம் செய்யமாட்டார்கள். இதனால் சிங்கில் ஆங்காங்கே கரைகள் படிந்து பார்ப்பதற்கே அவலமாக இருக்கும். உங்கள் வீட்டு சிங்க் அப்படி இருந்தால், எளிய முறையில் சுத்தம் செய்ய, ஏதாவது ஒரு ஹேண்ட் வாஷ் லிக்விடை சிங்கிள் சிறிதளவு ஊற்றி,  ஒரு கம்பி நாரை கொண்டு நன்கு எல்லா இடங்களிலும் தேய்த்து, பின் தண்ணீரால் சிங்கை கழுவவும். இப்போது சிங்கில் கறைகள் நீங்கி பளிச்சென்று இருக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved