Dhanush First Lover: ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு முன்பு தனுஷ் காதலித்தது யாரை தெரியுமா? பிளாஷ் பேக் தகவல்.!
நடிகர் தனுஷ், தன்னுடைய பள்ளி பருவ காதல் குறித்து பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ள பிளாஷ் பேக் தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது.
Dhanush
தமிழ் சினிமாவில் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில், தன்னுடைய சகோதரர் செல்வராகவன் இயக்கிய 'துள்ளுவதோ இளமை' என்கிற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தனுஷ். முதல் படத்திலேயே தன்னுடைய வெற்றியை தனுஷ் பதிவு செய்து அனைவரையும் வியக்க வைத்திருந்தாலும், இப்படத்திற்கு ஏற்ற போல் கதாபாத்திரம் இருந்ததால் மட்டுமே இந்த படம் வெற்றி பெற்றதாக, சிலர் தங்களின் கருத்துக்களை முன் வைத்தனர்.
இதுபோன்ற விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மூன்றே வருடங்களில் அடுத்தடுத்து தரமான படங்களை தேர்வு செய்து நடித்து, தன்னை வெற்றி நாயகனாக ரசிகர்கள் மத்தியில் நிலை நிறுத்திக் கொண்டார் தனுஷ். குறிப்பாக தனுஷ் 'துள்ளுவதோ இளமை' படத்திற்கு பின்னர் நடித்த, காதல் கொண்டேன், திருடா திருடி, சுள்ளான், தேவதையை கண்டேன், புதுப்பேட்டை, பொல்லாதவன், யாரடி நீ மோகினி, படிக்காதவன், உத்தமபுத்திரன், என அடுத்தடுத்த படங்கள் ஹிட் லிஸ்டில் இணைந்தது. ஆடுகளம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார் தனுஷ்.
ரைட்டு விடு... ஒரே வார்த்தையில் ஓவராய் பேசிய குணசேகரனை அடக்கிய அப்பத்தா! எதிர்நீச்சல் அப்டேட்!
சமீப காலமாக வித்தியாசமான கதாபாத்திரங்களையும், கதைக்களத்தையும், தேர்வு செய்து நடித்து வரும் தனுஷ்... தற்போது கேப்டன் மில்லர், டி-50, தெலுங்கில் ஒரு திரைப்படம், ஹிந்தியில் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஒரு படம் என 4 படங்கள் இவரின் கைவசம் உள்ளன.
தற்போது தனுஷ் தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் பள்ளி கால காதல் குறித்து, பகிர்ந்து கொண்ட தகவல் சமூக வலைத்தளத்தில் மீண்டும் கவனிக்கப்பட்டுள்ளது. தனுஷ் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ராஞ்சனா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, தொகுப்பாளர்... இந்த படத்தில் எப்படி 13 வயதில் பார்த்த பெண்ணை நீங்கள் காதலிப்பீர்கள்.. அதே போல் நிஜத்திலும் காதலித்துள்ளர்களா என கேள்வி எழுப்பினார்.
அதற்க்கு தனுஷ், 16 வயதில் தன்னுடன் பள்ளியில் படிக்கும் ஒரு பெண்ணை காதலித்ததாகவும், அவள் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக இருப்பதை நான் உணர்ந்தேன். அதுவே அவர் மீது காதல் வர காரணமாக இருந்தது. அவரை கவர்வதற்காக நான் நிறைய விஷயங்கள் செய்துள்ளேன். ஒரு கட்டத்தில் அவளும் என்னை ஏற்றுக் கொண்டாள். ஆனால் ஒரு வருடம் கழித்து, தன்னை வேண்டாம் என்று சொன்னால். அது ஒரு க்ரஷ்ஷாக இருக்கலாம் என நினைத்தேன்? ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அது காதல் என்பதை உணர்ந்தேன். எனவே வாழ்க்கையில் எப்போதும் நேர்மையாக இருப்பது மிகவும் சிறந்தது என தெரிவித்தார்.
தனுஷின் 16 வயது காதல், தோல்வி அடைந்தாலும், அவர் தன்னுடைய திரையுலகில் வெற்றியை பதிவு செய்த பின்னர்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா - லிங்கா என்கிற இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கடந்தாண்டு தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற உள்ளதாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.