Kadhanaayagi: ராதிகா - கே.எஸ்.ரவிக்குமாரை நடிப்பில் அசர வைத்து.. 'கதாநாயகி' பட்டத்தை வென்றது யார் தெரியுமா?
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த கதாநாயகி நிகழ்ச்சியில், டைட்டில் பட்டத்தை கைப்பற்ற உள்ள, நாயகி யார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
Kadhanaayagi
அரைத்த மாவையே அரைக்காமல்... புதுமையான ரியாலிட்டி ஷோக்களை உருவாக்கி சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் சாதிக்க துடிக்கும் பலருக்கு, வாய்ப்புகளை அள்ளிக்கொடுப்பதில் விஜய் டிவி தொலைக்காட்சியை அடித்து கொள்ள முடியாது.
Vijay TV Reyality show
விஜய் டிவி தொலைக்காட்சியில், ஒளிபரப்பான கலக்க போவது யார், குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பலர், இன்று வெள்ளித்திரையில் காமெடி நடிகர்களாகவும், ஹீரோ - ஹீரோயினாகவும், சீரியலிலும் நடித்து வருகிறார்கள்.
சிவாஜி, ரஜினிகாந்த், வஹீதா ரஹ்மான் உள்பட.. தாதாசாகேப் பால்கே விருது பெற்ற பிரபலங்களின் விவரம்!!
Serial Heroine Choosing:
அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், விஜய் டிவி-யில் துவங்கப்பட்ட நிகழ்ச்சி தான் 'கதாநாயகி'. சீரியல் ஹீரோயின்களை தேர்வு செய்வதற்கான நிகழ்ச்சியாக இந்த ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பான நிலையில், ரசிகர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
Radhika And K.S.Ravikumar:
மேலும் சீரியல் வாய்ப்பு தேடிய பலர்... தங்களின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி நடுவர்களாக ராதிகா - கே.எஸ்.ரவிக்குமாரை அசர வைத்தனர். இந்த நிகழ்ச்சியின் செமி ஃபைனல் கடந்த வாரம் நடந்து முடிந்த நிலையில், இந்த நிகழ்ச்சியின் ஃபைனலுக்கான ஷூட்டிங் தற்போது முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
Rubeena And Rubiseena
இதில், கோவையில் இருந்து கலந்து கொண்ட இரட்டை சகோதரிகளான ரூபினா மற்றும் ரூபீஸினா ஆகியோர் டைட்டில் பட்டத்தை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையானால், விஜய் டிவி புதிய சீரியலில் இவர்கள் கதாநாயகியாக நடிப்பது உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.