Bigg Boss Reentry: பிக்பாஸ் வீட்டிற்குள் பிரதீப் ரீ-என்ட்ரி? அதிரடியாக நுழைந்த இரு போட்டியாளர்கள் இவர்கள் தான்
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், இன்றைய தினம் இரண்டு பழைய போட்டியாளர்கள் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக நுழைந்துள்ளனர். அவர்கள் யார் என்கிற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
BB Tamil 7
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என கூறப்பட்ட நிலையில், அக்ஷயா மற்றும் பிராவோ ஆகிய இரண்டு பேர் இன்றையதினம் பிக் பாஸ் வீட்டை விட்டு விடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
BB Tamil 7
சிங்கிள் எவிக்ஷனாக இருக்க வேண்டிய இந்த வாரம், திடீர் என டபுள் எவிக்ஷன் நடக்க காரணம் பிக் பாஸ் வீட்டில் ஹவுஸ் மேட்ஸ் இடையே நடந்த, பூகம்பம் டாஸ்க் தான். மூன்று பூகம்பம் டாஸ்க் நடைபெற்ற நிலையில், ஒரு டாஸ்கில் மட்டுமே போட்டியாளர்கள் வெற்றிபெற்ற நிலையில், இரண்டு டாஸ்குகளில் தோல்வியை தழுவினர்.
எனவே இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவதும், அவர்களுக்கு பதிலாக இரண்டு போட்டியாளர்கள் உள்ளே வருவதும் உறுதியானது. இந்த வாரம் பூர்ணிமாவை வெளியே அனுப்ப வேண்டும் என்பதில் பிக்பாஸ் ரசிகர்கள் சிலர் தீவிரமாக இருந்த நிலையில், எப்படியோ இந்த வாரம் அவர் தப்பித்து விட்டார்.
எனினும் புதிய போட்டியாளர்கள் வருகையால், கண்டிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல எதிர்பாராத மாற்றங்கள் நிகழ உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வாரம் உள்ளே என்ட்ரி கொடுக்க உள்ள அந்த இரண்டு பழைய போட்டியாளர்கள் யார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தன்னுடைய திறமையை வெளிக்காட்டுவதற்கு முன்பே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அனன்யா ராவ் மற்றும் விஜய் வர்மா ஆகிய இருவர் தான் உள்ளே மீண்டும் நுழைய உள்ளனர். இவர் இருவருமே ஒரு சில வாரங்களில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவர்கள் என்பதால், இவர்களுக்கு இன்னொரு வாய்ப்பை பிக்பாஸ் கொடுத்துள்ளார்.
மேலும் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வரவேண்டும் என்பது... பல ரசிகர்களின் ஆவலாக இருந்த போதும், அவர் மற்ற போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு வெளியேறியவர் இல்லை. இதன் அடிப்படையில் அவர் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் உள்ளே வருவது மிக கடினம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களின் விளையாட்டுகளையும், ஸ்டேடர்ஜியையும் நன்கு புரிந்து கொண்டு, டிவியில் பார்த்து விட்டு உள்ளே வரும் போட்டியாளர்கள்... எப்படி தங்களின் ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பது, எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.